சங்கர்லால் (திரைப்படம்)

டி. என். பாலு இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சங்கர்லால் (திரைப்படம்)
Remove ads

சங்கர்லால் (Sankarlal) 1981 ஆம் ஆண்டு இந்தியத் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்டதாகும். தெலுங்கு மொழியில் அந்தகாடு எனும் பெயரில் வெளியானது.

விரைவான உண்மைகள் சங்கர்லால், இயக்கம் ...

இயக்குநர் டி. என். பாலு அவர்கள், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் உயிரிழந்தார். பஞ்சு அருணாசலம், இப்படம் நிறைவடைவதற்கு உதவி புரிந்தார். மீதி படத்தை, ஒளிப்பதிவாளர் என். கே. விசுவநாதன், மற்றும் கமல்ஹாசன் அவர்களே இயக்குநராக பணிபுரிந்து படத்தை முழுவதுமாக முடித்தனர்.

Remove ads

நடிகர்கள்

Remove ads

தயாரிப்பு

இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியா கமல் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் இப்படத்தில் நடிக்க தேதி ஒதுக்கீடு செய்வதில் ஸ்ரீபிரியா மற்றும் இயக்குநர் டி. என். பாலு இடையே முரண்பாடு ஏற்பட்டதால் இப்படத்திலிருந்து விலகினார்.[2]

பாடல்கள்

இளையராஜா ( இளங்கிளியே.. பாடல் மட்டும் ), கங்கை அமரன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தனர்.

'கெல் கெல் மெயின்' (Khel Khel Mein -1975) எனும் இந்தி திரைப்படத்தின், ஒரு பாடலான "ஏக் மெயின் ஆர் ஏக் டூ.. (Ek Main Aur Ek Tu…) எனும் பாட்டு, இத்திரைப்படத்தில் முழுவதுமாக, மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

எண்பாடல்பாடகர்(கள்)பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1."இளங்கிளியே இன்னும் விளங்கலியே"..எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம்புலமைப்பித்தன்04:33
2."அட வாடா கண்ணு"..எஸ். பி. பாலசுப்பிரமணியம்புலமைப்பித்தன்04:24
3."கஸ்தூரி மான் ஒன்று"..எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன்புலமைப்பித்தன்04:36
4."தேடினேன்"..மலேசியா வாசுதேவன்கங்கை அமரன்04:24
5."உண்மை என்றும் வெல்லும்"..வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன்பஞ்சு அருணாசலம்04:13
6."பாதி கல்லில்"..(படத்தில் இல்லை)எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன், கமல்ஹாசன்புலமைப்பித்தன்04:27

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads