சங்குப்பிட்டிப் பாலம்

From Wikipedia, the free encyclopedia

சங்குப்பிட்டிப் பாலம்map
Remove ads

சங்குப்பிட்டிப் பாலம் வட இலங்கையில் யாழ்ப்பாணக் கடல் நீரேரிக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு சாலைப் பாலம் ஆகும். இது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சங்குப்பிட்டியையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கேரதீவையும் இணைக்கின்றது. செறிவான மக்கள் தொகை கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் இரண்டு பாலங்களில் இதுவும் ஒன்று.

விரைவான உண்மைகள் சங்குப்பிட்டிப் பாலம் Sangupiddy Bridge, போக்குவரத்து ...
Remove ads

வரலாறு

பிரித்தானியக் குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் 1932 ஆம் ஆண்டு சங்குப்பிட்டியையும் கேரதீவையும் இணைத்து ஆழம் குறைந்த யாழ்ப்பாணக் கடல் நீரேரிக்குக் குறுக்காகத் தரைப்பாலம் ஒன்றை அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது.[1] உள்ளூர் மீனவர்களும் உப்பு உற்பத்தியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததால் இத்திட்டம் முழுமையடையவில்லை.[2] பகுதியாகக் கட்டி முடிக்கப்பட்ட தரைப்பாலம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்திருந்த காலத்தில், இவ்வழியான போக்குவரத்து அடிக்கடி தடைப்பட்டது.[3]

உள்நாட்டுப் போர் ஓய்ந்த பின்னர் இவ்விடத்தில் பாலம் ஒன்றைக் கட்டுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.[4] இலங்கை துறைமுகங்கள் பெருந்தெருக்கள் அமைச்சு பாணந்துறைச் சந்தியில் அட்லாஸ் வகை மேம்பாலம் ஒன்றை அமைக்க மேபி அன்ட் ஜான்சன் என்னும் பிரித்தானிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், அந்தப் பாலம் பாணந்துறைக்குப் பதிலாகச் சங்குப்பிட்டியில் அமைக்கப்பட்டது. கட்டுமான வேலைகள் 2010 ஏப்ரலில் தொடங்கின. ஏழு அகல்வுகளைக் கொண்ட பாலத்தின் கட்டுமானம் 2010 செப்டெம்பரில் தொடங்கியது.[3][4] Construction was carried out by Access Engineering, a Sri Lankan company.[4][5] அக்சஸ் எஞ்சினியரிங் என்னும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் கட்டுமான வேலைகளை மேற்கொண்டது. பாலம் எட்டு மாதங்களில் நிறைவடைந்தது.[6] 2011 சனவரி 16 ஆம் நாள் பாலம் முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.[6]

இருவழிப் பாதையைக் கொண்ட இந்தப் பாலம் 288 மீட்டர் நீளமும் 7.35 மீட்டர் அகலமும் கொண்டது.[3][4][6] நிலத்தூண் அடிமானத்தின்மீது தாங்கப்பட்ட வலிதாக்கப்பட்ட காங்கிறீற்று அமைப்பில் மேல் உருக்கு வளைகளையும் உருக்குத் தகடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட பாலம் தாங்கப்படுகிறது. இப்பாலம் 1.037 பில்லியன் இலங்கை ரூபா (US$9.4 மில்லியன்) செலவில் அமைக்கப்பட்டது. இதற்கான நிதி, பிரித்தானிய அரசின் உருக்குப் பாலத் திட்டத்தினூடாக வழங்கப்பட்டது.[4][6][7]

இப்பாலம் ஏ-32 எனப்படும் யாழ்ப்பாணம் - மன்னார் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும்.[8] இப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னர் தலைநிலத்துக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஒரே சாலைத் தொடுப்பு ஆனையிறவு வழியான பாதையாகும். சங்குப்பிட்டிப் பாலத்தினால், தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பயணத்தில் 110 கிலோமீட்டர் (68 மைல்) அல்லது மூன்று மணி நேரம் குறைந்துவிட்டது.[4][6]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads