சபா பாரம்பரிய கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரம்பரிய கட்சி அல்லது சபா பாரம்பரிய கட்சி (வாரிசான்) (ஆங்கிலம்: Heritage Party (Warisan Malaysia); மலாய்: Parti Warisan (Warisan); சீனம்: 人民復興黨; சாவி: ڤرتي واريثن ) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும்.[1]
முன்பு இந்தக் கட்சி, சபா பாரம்பரிய கட்சி (ஆங்கிலம்: Sabah Heritage Party மலாய்: Parti Warisan Sabah) என்று அழைக்கப்பட்டது. சபா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு 2016 அக்டோபர் 17-ஆம் தேதி சாபி அப்டால் (Shafie Apdal) தலைமையில் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.
2021-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், இந்தக் கட்சியின் செயல்பாடுகள் தேசிய அளவில் விரிவடைந்தன. இதன் விளைவாக இந்தக் கட்சியின் பெயர் பாரம்பரிய கட்சி (Heritage Party) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2][3]
Remove ads
வரலாறு
2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் பாக்காத்தான் (Pakatan Harapan) கூட்டணியுடன் இந்தக் கட்சி ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிக் கொண்டது. பாக்காத்தான் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மலேசியக் கூட்டரசு அமைச்சரவைக்குள் பாரம்பரிய கட்சி பிரதிநிதித்துவப் படுத்தப்படும் என்று அதன் தலைவர் சாபி அப்டால் உறுதி அளித்தார்.[4]
சாபி அப்டால்
தீபகற்ப மலேசியாவில் வாரிசான் போட்டியிட விரும்பவில்லை என்றும் சாபி அப்டால் கூறியுள்ளார். ஆனாலும், தேசிய அளவில் உடன்படிக்கை எதுவும் செய்து கொள்ளாமல் பாக்காத்தான் கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற தம்முடைய பாரம்பரிய கட்சி தயாராக உள்ளது என்றும் சாபி அப்டால் கருத்து தெரிவித்தார்.
பாரம்பரிய கட்சி தொடங்கப்பட்ட தொடக்கக் காலத்தில், தம்முடைய கட்சி பல இனங்களைக் கொண்ட கட்சி என்றும்; தீபகற்ப மலேசியாவில் பாக்காத்தான் கூட்டணியின் அரசியல் பாணியை தம்முடைய பாரம்பரிய கட்சி பின்பற்றப் போவது இல்லை என்றும் வெளிப்படையாகக் கூறினார்.[5]
மலேசிய அரசியல் நெருக்கடி 2020
இருப்பினும் புத்ராஜெயாவில் பாக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், மத்திய அமைச்சரவையில் பாரம்பரிய கட்சிக்கும் அமைச்சர்கள் பதவிகள் கிடைக்கலாம் என்றும்; அதே வேளையில் சபா மாநில அரசாங்கத்தில் பாக்காத்தான் அமைச்சர்களும் மாநிலச் சேவையில் அமர்த்தப் படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.[6]
2018 பொதுத் தேர்தலில் பாக்காத்தான் வெற்றி பெற்ற போது, இந்தப் பாரம்பரிய கட்சி மத்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஆனாலும் பாக்காத்தான் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததும் ஏப்ரல் 2021-இல் பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேறியது.[7]
சபா மாநிலத் தேர்தல் 2020
2020-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலின் போது, மத்திய அரசாங்கத்தை ஆட்சி செய்த பெரிக்காத்தான் நேசனல், பாரிசான் நேசனல் மற்றும் ஐக்கிய சபா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருந்த சபா மக்கள் கூட்டணியால் பாரம்பரிய கட்சி தோற்கடிக்கப்பட்டது.
அதற்கு முன்னர் பாரம்பரிய கட்சி, சபா மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சியாக இருந்தது. 2020 சபா மாநிலத் தேர்தலில், சபா மாநில அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பாரம்பரிய கட்சி ஒரு தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.[8]
இருப்பினும் 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாக்காத்தான் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. பாரிசான் நேசனல் கூட்டணியுடன் நடுவண் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன் விளைவாக இந்தப் பாரம்பரியக் கட்சிக்கும் நடுவண் அரசாங்கப் பதவிகள் வழங்கப் பட்டன.[9][10]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads