சம்பு மகாராஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டிட் சம்பு மகாராஜ் (Shambhu Maharaj) (1910 - 4 நவம்பர் 1970) இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதக்கின் லக்னோ கரானாவின் (பள்ளி) புகழ்பெற்ற குரு ஆவார்.[1]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கையும் பயிற்சியும்
அயோத்தி நவாப் வாஜித் அலி ஷாவின் அரசவையில் இருந்த கல்கா பிரசாத் மகாராஜின் இளைய மகனான இவர் லக்னோவில் சம்புநாத் மிஸ்ரா என்ற பெயரில் பிறந்தார். கல்கா பிரசாத்தின் தந்தை தாகூர் பிரசாத் கதக்கின் சிக்கல்களை நவாபிற்கு கற்பித்தவர் என்று அறியப்பட்டது.
இவர், தனது தந்தையிடமிருந்தும், மாமா பிந்தாடின் மகாராஜிடமிருந்தும்,தனது அண்ணன் அச்சன் மகாராஜிடமிருந்தும் பயிற்சி பெற்றார். நடனக் கலைஞர் இலச்சு மகாராஜ் இவரது அண்ணன் ஆவார். பின்னர், இந்துஸ்தானி இசையை உஸ்தாத் ரஹிமுதீன் கானிடமிருந்து கற்றுக்கொண்டார்.
Remove ads
தொழில்
1952 ஆம் ஆண்டில், புது தில்லியில் உள்ள பாரதிய கலா கேந்திரத்தில் (பின்னர் கதக் கேந்திரா ) சேர்ந்தார். பின்னர், அதில் நடன (கதக்) துறையின் தலைவரானார். 1967 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் மற்றும் 1956 இல் பத்மசிறீ ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டார் .
சொந்த வாழ்க்கை
இவருக்கு கிருட்டிணமோகன் மற்றும் இராம்மோகன் என்ற இரண்டு மகன்களும், இரமேசுவரி என்ற மகளும் இருந்தனர். இவரது மாணவர்களில், கதக்கின் மிகவும் பிரபலமானவர்கள் இவரது மருமகன் பிர்ஜு மகாராஜ், குமுதினி லக்கியா, தமயந்தி ஜோஷி, மாயா ராவ், பாரதி குப்தா, உமா சர்மா, விபா தாதீச் மற்றும் ரினா சிங்கா ஆகியோர் அடங்குவர்.[2][3] இவரது மகன் இராம்மோகனும் இவரது சீடராக இருந்தார். மேலும் இவரது பாணியை தொடர்ந்து செய்கிறார். புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் தொண்டை புற்றுநோய்க்கு மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்த இவர் 1970 நவம்பர் 4 அன்று இறந்தார்.பெற்றார்.
மேற்கோள்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads