சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்
கேரளத்தின் கொல்லத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம் (Sardar Vallabhbhai Patel Police Museum) என்பது இந்தியாவில் காவல் துறையின் வரலாறு மற்றும் வளர்ச்சி சுவடுகளுக்காக அமைக்கபட்ட ஒரு அருங்காட்சியகமாகும் . இது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கொல்லத்தில், கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு வழக்கறிஞரும் அரசியல்வாதியான வல்லபாய் பட்டேல் பெயரிடப்பட்டுள்ளது.
Remove ads
அம்சங்கள்
இந்த அருங்காட்சியகம் 2000 ஆண்டில் திறக்கப்பட்டது. [1] இங்கு துப்பாக்கிகள், தோட்டாக்கள், இயந்திரங்கள் மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த பிற ஆயுதங்கள் உள்ளிட்ட 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவை காட்சிப்படுத்தபட்டுள்ளன. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் மரபணு சோதனைகள், மனித எலும்புகள், கைரேகைகள், காவல்துறை நாய்களின் ஒளிப்படங்கள், வெவ்வேறு காவல்துறை அணிகளின் காவலர்களுக்கு வழங்கப்பட்ட பலவிதமான பதக்கங்கள் பற்றிய தகவல்கள் விளக்கப்படங்கள் போன்றவை உள்ளன. [2] 1.1 டன் எடையில் காவலர் திரு. சந்தோஷ் அவர்களால் கற்காரையால் உருவாக்கபட்ட வல்லபாய் படேலின் சிலை 2005 சனவரி அன்று திறக்கப்பட்டது.
Remove ads
அமைவிடம்
- கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் - 100 m (330 அடி)
- அந்தமுக்கம் நகர பேருந்து நிலையம் - 1.1 km (0.68 mi)
- கொல்லம் கே.மா.சா.போ.கழக பேருந்து நிலையம் - 1.7 km (1.1 mi)
- கொல்லம் துறைமுகம் - 2.9 km (1.8 mi)
- கொல்லம் கடற்கரை - 2.2 km (1.4 mi)
- ஆசிரம மைதானம் - 2.4 km (1.5 mi)
படக்காட்சியகம்
- அருங்காட்சியகத்தின் துவக்க விழா குறித்த கல்வெட்டு
- நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மகாத்மா காந்தியின் சிலை
- அருங்காட்சியகத்தின் முன் அமைந்துள்ள வல்லபாய் படேலின் சிலை
- நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads