சர்வர் சுந்தரம்

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சர்வர் சுந்தரம்
Remove ads

சர்வர் சுந்தரம் (Server Sundaram) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் மற்றும் பஞ்சு ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

விரைவான உண்மைகள் சர்வர் சுந்தரம், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

ஏழை சுந்தரம் (நாகேஷ்) ஒரு நடிகனாகும் குறிக்கோளுடன் மதராஸிற்கு வருகிறான். ஆனால், கிரீன்லேண்ஸ் எனும் உணவகத்தில் ஒரு சர்வர் வேலை தான் கிடைத்தது. ஒரு உணவாகத்தின் உரிமையாளர் சக்ரவர்த்தியின் மகள் ராதா. அவள் மஹாபலிபுரத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் பொழுது, சுந்தரம் ராதாவை சந்திக்கிறான். அவள் நன்கு பழகுவதை காதல் என்று தவறாக எடுத்துக்கொள்கிறான் சுந்தரம். அந்நிலையில், செல்வாக்குள்ள தொழிலதிபரான தன் நண்பன் ராகவனை உணவகத்தில் சந்திக்கிறான். தனது நடிப்புக் கனவை பற்றியும், பெயர் சொல்லாமல் காதலியைப் பற்றியும் ராகவனிடம் கூறுகிறான் சுந்தரம். அந்த பெண்ணிடம் காதலை சொல்லுமாறு சுந்தரத்தை வலியுறுத்துகிறான் ராகவன்.

ராகவன் திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் பொழுது, அந்த பெண் தான் சுந்தரம் காதலிக்கும் பெண் என்று தெரியவந்து, பெண் பார்க்க செல்லாமல் சுந்தரத்திற்கு காதல் உதவி செய்ய முடிவு செய்கிறான் ராகவன். மேலும் நடக்கவும் ராகவன் உதவி செய்ய, அப்பாவி கணவன் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகனாக வறள்கிறான் சுந்தரம். அதற்காக சுந்தரத்தைப் பாராட்ட வரும் ராதாவிடம் ராகவன் உரையாடுகிறான். சுந்தரம் ராதாவை காதல் செய்ததால் தான், தான் ராதாவை பெண் பார்க்க வரவில்லை என்று கூறுகிறான் ராகவன். மாறாக, ராதா சுந்தரத்தை காதல் செய்யவில்லை என்று தெரியவர, அதை சுந்தரத்திடம் இருந்து மறைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ராகவன்.

சுந்தரம் நடிப்பில் அதிகம் நேரம் செலவிடுவதால், தன் தாயுடன் அதிக நேரம் இருப்பதில்லை என்று சுந்தரத்தின் தாய் வருந்துகிறாள். நாளடைவில் ராதாவின் மீதுள்ள சுந்தரத்தின் அன்பு மறையும் என்று நினைத்தான் ராகவன். மாறாக, சுந்தரத்தின் காதல் அதிகமானதால், தன் ஆசையை துறக்கத் துணிந்தான் ராகவன். ஆனால் சுந்தரத்தின் காதலை ராதா நிராகரிக்கிறாள். பின்னர், ராதாவை யார் மணந்தார் என்பதே மீதிக் கதையாகும்.

Remove ads

நடிகர்கள்

இசை

கண்ணதாசனும், வாலியும் எழுதிய பாடல் வரிகளுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads