சாயா சோமேஸ்வரர் கோயில்

பொ.ச. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோயில் From Wikipedia, the free encyclopedia

சாயா சோமேஸ்வரர் கோயில்map
Remove ads

சாயா சோமேசுவரர் கோயில் (Chaya Someswara Temple) சாயா சோமேசுவர சுவாமி ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தெலங்காணாவின் நல்கொண்டா மாவட்டத்தில் பனகாலில் அமைந்துள்ள ஒரு சைவ இந்து கோவில் கோவிலாகும்.[1][2] இந்தக் கோவிலில் மூன்று கருவறை உள்ளது. இது கோயில் கட்டிடக்கலை வடிவமாகும். இது திரிகூடலாயம் (மூன்று சன்னதி வளாகம்) என்று அழைக்கப்படுகிறது. இவை சிவன், திருமால், சூரியன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. மூன்று சிவாலயங்களும் சிக்கலான செதுக்கப்பட்ட தூண்களுடன் ஒரு பொதுவான மண்டபத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த சிற்பங்கள் மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கின்றன. இந்தக் கோயிலின் விமானம் பிரமிடுகளை ஒத்துள்ளது, இது பொ.ச. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் பனகால் பிராந்தியத்தில் தெலுங்குச் சோடர்கள்|குண்டூரு சோழர்களும், காக்கத்தியப் பேரரசின் முதலாம் பிரதாபருத்திரன் ஆகியோரின் காலத்தில் கட்டப்பட்டது.[3][4][5][6][7] இந்தக் கோயில் மகா சிவராத்திரியின் போது பிரபலமான புனித யாத்திரை தலமாக விளங்குகிறாது. பிரதானக் கோவிலில் சிவலிங்கத்தின் மீது நாள் முழுவதும் ஒரு நித்திய நிழல் (தெலுங்கில் சாயா) இருப்பதால் இந்த கோவிலுக்கு அதன் பெயர் வந்தது. [8]

விரைவான உண்மைகள் சாயா சோமேசுவரர் கோயில், அமைவிடம் ...

இந்த கோயில் பனகாலில் உள்ள மற்றொரு சைவ ஆலயமான பச்சலா சோமேசுவரர் கோயிலுக்கு அருகில் உள்ளது. அர்த்தமண்டபத்தில் உள்ள தூண்களும், மத்திய சிவன் சன்னதிக்கு அருகிலுள்ள திறந்தவெளிகளும் கோயில் கட்டிடக் கலைஞர்களால் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

Remove ads

அணுகல்

இந்த கோயில் பனகாலில் மாவட்ட தலைமையகமான நல்கொண்டாவிலிருந்து 4 கி.மீ தூரத்திலும், ஐதராபாத்திலிருந்து 107 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது கிராமத்தின் பெரும்பாலான நெய் வயல்கள் கிழக்கே அமைந்துள்ள உதயசமுத்திரம் ஏரிக்கு மத்தியில் அமைந்துள்ளது. [9] கோவிலில் உள்ள [லிங்கம் பொதுவாக முழங்கால் அளவு ஆழமான நீரில் உள்ளது. [10] இந்தக் கோயில் இதே காலகட்டத்தில் உள்ள மற்றொரு சைவ சன்னதியான பச்சலா சோமேசுவரர் கோயிலுக்கு அருகிலேயே (சுமார் 1 கி.மீ) உள்ளது.[11] தொல்லியல் அருங்காட்சியகமான, பனகால் அருங்காட்சியகம் சாயா சோமேசுவரர் கோயிலுக்கு மேற்கே 1.3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

Remove ads

ஆலய அதிசயங்கள்

இங்குள்ள இலிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்னவென்றால், காலை முதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான் உலக நியதி. ஆனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. ஆனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் விழுவதில்லை.[11]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

புகைப்படத் தொகுப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads