சிகார்
பாகித்தானிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிகார் ( Shigar) என்பது இதே பெயரிலுள்ள சிகார் மாவட்டத்தின் தலைமையகமும் மற்றும் வடக்கு பாக்கித்தானில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் பல்திஸ்தான் பிரிவில் உள்ள வட்டமும் ஆகும். இது பிராந்தியத்தின் மிகவும் தொலைதூரப் பகுதியில் சிகார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களுக்கு இது ஒரு பிரபலமான தளம். மேலும், இது பல்வேறு சமூகங்களுடன் தொடர்புடைய கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த பல வரலாற்று கட்டிடங்களைக் கொண்டுள்ளது.
இந்த நகரத்தில் கிட்டத்தட்ட திபெத்திய வம்சாவளியைச் சேர்ந்த பால்டி மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஏறக்குறைய 65% மக்கள் சியா இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். 26% பேர் நூர்பக்சி பிரிவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் சன்னி இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிகார் பள்ளத்தாக்கு வழியாக, காரகோரம் மலைத்தொடரை அடையலாம். இதில் கே-2 கொடுமுடி உட்பட ஐந்து எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் உள்ளன. [1]
Remove ads
வரலாறு
பாரம்பரியத்தின் படி, சூபித் துறவி சையத் அலி அம்தானி 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிகாருக்கு வந்து உள்ளூர் மக்களை இசுலாத்திற்கு மாற்றினார். இன்றுவரை, இப்பகுதியில் பள்ளிவாசல்கள் மற்றும் மதப் பள்ளிகள் உள்ளன.[2]
சுற்றுலா அம்சங்கள்




நகரத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்கள்:
- சிகார் கோட்டை
- அம்புரிக் பள்ளிவாசல்
- கான்கா -இ-முஅல்லா சிகார்
காலநிலை
சிகார் குளிர்ந்த பாலைவன காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பன் ). [3]
புகைப்படங்கள்
- சிகாருக்கு வெளியே செல்லும் ஒரு சாலை. ஸ்கர்டு வரை, கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாக செல்கின்றன.
- சிகாரிலுள்ள கிலிங்ராங் பள்ளிவாசல்
- சிகாரிலுள்ள உள்ளூர் பாக்கித்தானியர்கள் செண்டாட்டத்தை ரசிக்கிறார்கள்.
- குலாப்பூர் பாலம்
- பிசில் சூரிய அஸ்தமனம், பாசா பள்ளத்தாக்கு, சிகார்
- பிசில், பாசா பள்ளத்தாக்கு, சிகார்
- சிகார் ஆறு
- பாசா பள்ளத்தாக்குக்குச் செல்லும் சாலை
- திசார் கிராமம், சிகார் பள்ளத்தாக்கு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads