சிக் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

சிக் மாவட்டம்map
Remove ads

சிக் மாவட்டம் (மலாய்: Daerah Sik; ஆங்கிலம்: Sik District; சீனம்: 锡县) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

விரைவான உண்மைகள் சிக் மாவட்டம், நாடு ...
விரைவான உண்மைகள் சிக் மாவட்ட ஊராட்சி Sik District CouncilMajlis Daerah Sik, வகை ...

கெடா மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான சிக் மாவட்டத்தின் பரப்பளவு 1635 சதுர கி.மீ.; அதாவது கெடா மாநிலத்தின் பரப்பளவில் 17.35% ஆகும்.

இந்த மாவட்டத்தின் வடமேற்கில் பாடாங் தெராப் மாவட்டம் (Padang Terap District), வடக்கே தாய்லாந்து நாடு, தெற்கே பாலிங் மாவட்டம் (Baling District), தென்மேற்கில் கோலா மூடா மாவட்டம் (Kuala Muda District), மேற்கில் பெண்டாங் மாவட்டம் (Pendang District) ஆகியவை எல்லைகளாக உள்ளன.

Remove ads

சொல் பிறப்பியல்

இந்த மாவட்டத்தின் பெயர் அரபு வார்த்தையான "சையத்" (Syed) அல்லது "செயிக்" (Sheikh) என்பதில் இருந்து பெறப்பட்டதாக அறியப்படுகிறது.

இப்பகுதியில் இசுலாமிய சமயத்தைப் பரப்பிய அரேபிய சமயப்பரப்பு குழுவினரின் பெயர்களில் "சையத்" அல்லது "செயிக்" எனும் சொற்கள் பரவலாக இருந்தன. அந்தச் சொற்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியில் (Pattani Malay) "சிக்" (Sik) மற்றும் "சைக்" (Saik) என உச்சரிக்கப் படுகிறது.

Remove ads

நிர்வாகப் பிரிவுகள்

முக்கிம்கள்

சிக் மாவட்டம் 3 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • செனரி (Jeneri)
  • சிக் (Sik)
  • சொக் (Sok)

நகரங்கள்

  • சிக் நகரம் (Sik Town)
  • பெக்கான் பத்து லீமா சிக் (Pekan Batu Lima Sik)
  • பெக்கான் குலாவ் (Pekan Gulau)
  • பெக்கான் காஜா பூத்தே (Pekan Gajah Puteh)
  • பெக்கான் சாரோக் பாடாங் (Pekan Charok Padang)

மூடா ஆறு

சிக் மாவட்டத்தில் மிக முக்கியமானது மூடா ஆறு. இந்த ஆறு ஒரு வகையில் இந்த மாவட்டத்தின் வரப்பிரசாதமாக அமைகிறது. கெடா மாநிலத்தில் மிக நீளமான ஆறு. 178 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, மலாக்கா நீரிணையை அடைவதற்கு முன், கோலா மூடா, பாலிங், சிக் மற்றும் கூலிம் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.[2]

கெடா, பினாங்கு மாநிலங்களுக்கு எல்லையாக அமைந்து உள்ள இந்த ஆறு பினாங்கு மாநிலத்திற்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது. தவிர இந்தப் பகுதியின் நெல் சாகுபடிக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளது.[2]

ஆற்றுப் படுகை நகரங்கள்

உள்கட்டமைப்பு

மூடா ஆற்றில், 2004-ஆம் ஆண்டு, 360 மில்லியன் ரிங்கிட் செலவில் பெரிஸ் அணை (Beris Dam) கட்டப்பட்டது. நிலப் பாசனத்திற்குக் கிடைக்கும் தண்ணீரைப் பெருக்கவும்; மூடா நதிப் படுகையில் உள்ள நீரின் ஓட்டத்தைச் சீராக்கவும் அந்த அணை கட்டப்பட்டது.[3]

பருவமழைக் காலத்தில், மூடா ஆற்றில் பெரும்பாலும் மழை வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடும். 2003 அக்டோபர் 6-ஆம் தேதி, மூடா ஆற்றின் நீர் அளவீடு, வரலாறு காணாத அளவிற்கு 1340 m³/s-ஆக உயர்ந்து, வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது.[4]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads