பாலிங் மாவட்டம்
மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலிங் மாவட்டம் என்பது (மலாய்:Daerah Baling; ஆங்கிலம்:Baling District; சீனம்:华玲县) மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரத்தின் பெயர் பாலிங். பாலிங் நகரம், பாலிங் மக்களவை தொகுதியின் தலைமை நகரமாகவும் உள்ளது.[1][2]
இந்த மாவட்டம் கெடா மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டார் நகரில் இருந்து ஏறக்குறைய 110 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டத்திற்குத் தெற்கே பேராக் மாநிலம்; வடக்கே தாய்லாந்து நாட்டின் பெத்தோங் நகரம் உள்ளன.
Remove ads
வரலாறு
மலேசிய வரலாற்றில் சிறப்பு பெற்ற மாவட்டங்களில் பாலிங் மாவட்டமும் ஒன்றாகும். 1948-ஆம் ஆண்டில் இருந்து 1960-ஆம் ஆண்டு வரை, மலாயா கம்னியூஸ்டுப் போராளிகளுக்கு எதிராகப் பாலிங் மாவட்டத்தில் அவசரகாலப் பிரகடனம் செய்யப் பட்டது.
மலாயா வரலாற்றில் புகழ்பெற்ற பாலிங் பேச்சுவார்த்தை இங்குதான் நடைபெற்றது. மலாயா கம்னியூஸ்டு கட்சிக்கும் மலாயா அரசாங்கத்திற்கும் இடையே அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.[3]
மலாயா அவசரகால நிலைமையைத் தீர்க்கும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான், டத்தோ டான் செங் லோக், சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்ஷல் ஆகியோர் கலந்து கொண்டனர்.[4][5]
மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் சின் பெங்; அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரசீட் மைடின்; மத்திய பிரசார அமைப்பின் தலைவர் சென் தியென் கலந்து கொண்டனர்.[6]
ஒரு சுமுகமான முடிவு காண்பதே அந்த பாலிங் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்கு. ஆனால், சின் பெங் முன்வைத்தக் கோரிக்கைளை மலாயா அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
அதே சமயத்தில் சரணடைதல் விதிமுறைகளை மலாயா கம்யூனிஸ்டு கட்சியினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அதனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
பாலிங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
- பாக்காய் (Bakai)
- பொங்கோர் (Bongor)
- பாலிங் நகரம் (Baling Town)
- குப்பாங் (Kupang)
- பூலாய் (Pulai)
- சியோங் (Siong)
- தாவார் (Tawar)
- தெலோய் கானான் (Teloi Kanan)
மலேசிய நாடாளுமன்றம்
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) பாலிங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.
பாலிங் மாநிலச் சட்டமன்றம்
கெடா மாநிலச் சட்டமன்றத்தில் பாலிங் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
Remove ads
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kulim
- Kulim’s Municipal Council Website
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads