சிங்கப்பூர் இராபிள்ஸ் கல்வி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராபிள்ஸ் கல்வி நிலையம் (மலாய்: Institusi Raffles (RI); ஆங்கிலம்: Raffles Institution; சீனம்: 莱佛士书院) என்பது சிங்கப்பூரில் இயங்கிவரும் கட்டுபாடற்ற ஒரு கல்வி நிலையம் ஆகும். 1823-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிலையம் சிங்கப்பூர் நாட்டின் மிகப் பழைமையான பள்ளியாக அறியப்படுகிறது.
தன்னாட்சி பெற்ற நிர்வாகத்தைக் கொண்டுள்ள இந்தக் கல்வி நிலையம், 1-ஆம் படிவம் முதல் 4-ஆம் படிவம் வரை (ஆண்களுக்கு மட்டும்) இடைநிலைக் கல்வியையும்; 5-ஆம் படிவம்; மற்றும் 6-ஆம் படிவங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியையும் வழங்குகிறது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற அரசியல்வாதிகளையும் கல்வியாளர்களையும் உருவாக்கிய இந்தக் கல்வி நிலையம், தென்கிழக்காசியாவிலேயே மிகப் பழைமையான கல்வி நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது.
Remove ads
பொது


இந்தக் கல்வி மையம், சிங்கப்பூர் அதிபரின் நிதியுதவி பெற்ற 96 அறிஞர்கள், மூன்று சிங்கப்பூர் அதிபர்கள், இரண்டு சிங்கப்பூர் பிரதமர்கள், நான்கு சிங்கப்பூர் நாடாளுமன்றத் தலைவர்கள், அமைச்சர்கள் பலரையும் உருவாக்கி உள்ளது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் உருவாக்கி உள்ளது.[4]
அத்துடன் சட்டப்பூர்வ வாரியங்கள், முகமைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலரையும் இந்தக் கல்வி மையம் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[5]
அதிபர்கள் பிரதமர்களை உருவாக்கிய நிலையம்
இந்தக் கல்வி நிலையத்தின் பழைய மாணவர்களில் முன்னாள் பிரதமர்கள் லீ குவான் யூ; கோ சொக் டொங், முன்னாள் அதிபர்கள் யூசுப் இசாக், பெஞ்சமின் சியர்ஸ் மற்றும் வீ கிம் வீ ஆகியோர் அடங்குவர்.[6]
2022-ஆம் ஆண்டில் மட்டும், உலகத்தரம் வாய்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 48 மாணவர்களும்; ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 52 மாணவர்களும் உயர்க்கல்வி படிப்பதற்கு, இந்த கல்வி நிலையத்தில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.[7][8]
சிங்கப்பூர் இராபிள்ஸ் கல்வி நிலையம் உலகளாவிய முன்னணி-எட்ஜ் பள்ளிகளின் கூட்டணி (Global Alliance of Leading-Edge Schools) என்று அழைக்கப்படும் உலகின் சிறந்த மேல்நிலைப் பள்ளிகளின் பன்னாட்டு அமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ளது.
Remove ads
உருவாக்கம்

ராபிள்ஸ் கல்வி நிலையம் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் நிறுவப்பட்டது. இராபிள்ஸ் ஏப்ரல் 1, 1823 அன்று கூட்டிய ஒரு கூட்டத்தில் "சிங்கப்பூர் கல்வி நிலையம்" நிறுவப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.[9][10] சிங்கப்பூர் குடியேற்றம் நிறுவப்பட்ட பின்னர், சிங்கப்பூர் மக்களுக்காக ஒரு கல்லூரி உருவாக்கப்பட வேண்டும் என இராபிள்ஸ் விரும்பினார்.
உள்ளூர்த் தலைவர்களின் பிள்ளைகளுக்கும்; பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும்; உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்ள விரும்பும் சிங்கப்பூரின் புதிய பிரித்தானிய குடியேற்றத்தில் உள்ள மற்றவர்களுக்கும்; கல்வி வழங்குவதே அவரின் முதன்மை நோக்கமாக இருந்தது.[11]
Remove ads
மலாக்கா ஆங்கிலோ-சீனக் கல்லூரி

மற்றொரு நோக்கம்; "சிங்கப்பூர் நாட்டில் சிதறிக் கிடந்த வரலாற்று இலக்கியங்களையும்; நாட்டுப்புற மரபுகளையும் சேகரிப்பது" ஆகும். இதனால் மிக முக்கியமான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு அச்சிடப்படலாம் என இராபிள்ஸ் கருதினார்.[12][13]
அந்தக் காலக் கட்டத்தில், மலாக்காவில், பாதிரியார் மோரிசன் (Reverend Robert Morrison) நிறுவிய ஆங்கிலோ-சீனக் கல்லூரியுடன் (Anglo-Chinese College) சிங்கப்பூர் கல்வி நிலையம் இணைக்கப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் நிறைவேறவில்லை.[14] சிங்கப்பூர் கல்வி நிலையம் உருவாககும் திட்டம் நிறைவு பெற்றதும்; இராபிள்ஸ் உடனடியாக, சிங்கப்பூர் கல்வி நிலையத்திற்கு சிங்கப்பூர் டாலர் S$ 2,000 நன்கொடை வழங்கினார்.
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
மேலும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் இருந்து S$ 4,000 மானியத்தைப் பெற்றுத் தந்தார். இந்தத் திட்டத்திற்காக இராபிள்ஸ் மொத்தம் S$ 17,495 நிதி திரட்டினார். அந்த வகையில், சிங்கப்பூரில் ஒரு கல்வி நிலையத்தைக் கட்டுவதற்கான நிதி போதுமான அளவிற்குத் திரட்டப்பட்டது. [15]
அதன் பின்னர், கல்வி நிலையத்திற்கான அவரே பாடத் திட்டத்தை வரைந்தார்; பின்னர் கல்வி நிலையத்திற்கான அறங்காவலர் கட்டமைப்பையும் வரைந்து கொடுத்தார். இவ்வாறுதான் சிங்கப்பூர் கல்வி நிலையம் எனும் இராபிள்ஸ் கல்வி நிலையம் உருவானது.[16][17] அவ்வாறு உருவாகிய சிங்கப்பூர் கல்வி நிலையம், தற்போது பன்னாட்டு அளவிலான உயர்க் கல்வித் தரத்தில் உயர்ந்த நிலையில் உச்சம் பார்க்கிறது.
Remove ads
முன்னாள் மாணவர்கள்
(இது ஒரு பகுதி மட்டுமே)
- யூசுப் இசாக், சிங்கப்பூரின் முதல் அதிபர்
- வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4-ஆவது அதிபர்
- லீ குவான் யூ, சிங்கப்பூரின் முதல் பிரதமர்
- கோ சொக் டொங், சிங்கப்பூரின் இரண்டாவதுபிரதமர்
- கா. சண்முகம், உள்துறை அமைச்சு (சிங்கப்பூர்)
- சண்முகம் ஜெயக்குமார், முன்னாள் சிங்கப்பூர் அமைச்சர்
- சி. இராசரத்தினம், முன்னாள் சிங்கப்பூர் அமைச்சர்
- அப்துல் ரசாக் உசேன், 2-ஆவது மலேசியப் பிரதமர்
- தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் நீதிபதி
Remove ads
மேலும் காண்க
மேலும் படிக்க
- Neil J Ryan. The Last Expatriate: Reminiscences of an educationalist in Malaysia. Utusan Publications & Distributors Sdn. Bhd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-61-1730-7
- Nik Ismail Nik Daud. Arbain Kadri. Prosiding Simposium MCOBA 1. 3 December 1989.
சான்று நூல்கள்
- Khasnor Johan|Johan, Khasnor. Educating The Malay Elite: The Malay College Kuala Kangsar, 1905-1941. Pustaka Antara. Malay College Old Boys Association. The Malaysian Branch of the Royal Asiatic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-937-356-8
- Johan, Khasnor. Leadership But What's Next? பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-3318-52-5
- Paridah Abd. Samad (2009). Datuk Seri Najib: A Long Political Journey. From The Golden Boy of Malaysian Politics to Malaysia's Sixth Prime Minister. Partisan Publication & Distribution. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-99417-4-6
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

