சிங்காரப்பேட்டை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிங்காரப்பேட்டை (Singarapettai) என்பது இந்தியா, தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சிங்காரப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்டது.

விரைவான உண்மைகள் சிங்காரப்பேட்டை, நாடு ...
Remove ads

அமைவிடம்

இந்த ஊரானது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தெற்கு எல்லையில் உள்ளது. கிருஷ்ணகிரியிலிருந்து திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH66) அமைந்துள்ளது. மேலும் இது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 232 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

வரலாறு

சிங்காரப் பேட்டையானது ஐதர் அலி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையிலான போரில் முக்கிய இடமாக இருந்தது. தண்டம்பட்டி என்ற இடத்தில் ஐதர் அலியும் ஆற்காடு நவாப் நிஜாம் அலியும் இப்பகுதியின் உரிமைக்காக மோதிக் கொண்டனர். ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக ஆங்கிலேயர் படைத் தளபதி பிட்ஸ்ஜராலாட்டு தன் படையுடன் வந்து மோதி ஐதரை வென்றார். 1767 திசம்பரில் நடந்த இப்போரின் காரணமாக இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர் துவங்கியது. சிங்காரப் பேட்டையில் இருந்த கோட்டையின் இடிபாடுகள் அண்மைக் காலம்வரை இருந்தன.[2]

ஆங்கிலேயர் காலத்தில் தளபதி ஜான் ரீடு தலைமையில் சிங்காரப்பேட்டை வட்டத்தின் கஸ்பாவாக (தலைநகர்) இருந்தது. இது 1796-97 ஆண்டுகளில் கலைக்கபட்டது.[2]

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 537, மொத்த மக்கள் தொகை 2253, இதில் 1143 ஆண்களும், 1110 பெண்களும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 69.7 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

சிறப்புகள்

"சிங்காரம்" என்னும் சொல் அழகையும், "பேட்டை" என்னும் சொல் மக்களின் வசிப்பிடத்தையும் குறிக்கும். தமிழ்நாட்டின் பெரிய மின் நிலையங்களில் ஒன்று சிங்காரப்பேட்டையில் அமைந்துள்ளது.

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads