சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாத்திரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் சித்தர்காடு என்ற புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இத்தலம் நெல்லி மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. 'தாத்ரி' என்ற சமசுகிருதச் சொல்லுக்கு 'நெல்லி' என்று பொருள். எனவே, இங்கு குடியிருக்கும் இறைவன் தாத்திரீசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.[1] தாயார் பிரசன்ன குந்தளாம்பிகை என்ற பூங்குழலி ஆவார். தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும். 'சித்தர்காடு' என்றிருந்த இவ்விடம் காலப்போக்கில் பெயர் மருவி 'சித்துக்காடு' என்றாயிற்று. எனவே, 'சித்துக்காடு தாத்திரீசுவரர் கோயில்' என்ற பெயரிலும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...

சுமார் 800 வருடங்களுக்கு முன்னர் மதுரையை ஆண்ட சுந்தர பாண்டியன் இக்கோயிலைக் கட்டினார்.[2]

இக்கோயிலுக்கு அருகிலேயே சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சுந்தரராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.

Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 53.08 மீ. உயரத்தில், (13.0895°N 80.0514°E / 13.0895; 80.0514) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

Thumb
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில்
சித்தர்காடு தாத்திரீசுவரர் கோயில் (தமிழ்நாடு)

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்தரம், திருக்கார்த்திகை ஆடிக் கார்த்திகை, தைக் கார்த்திகை, மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.[3]

இதர தெய்வங்கள்

தட்சிணாமூர்த்தி, நடராசர் இலட்சுமி, சரசுவதி, கணபதி, சுப்பிரமணியர், நந்தி, ஆதி சங்கரர், படுக்கை ஜடாமுனி சித்தர் மற்றும் பிராண தீபிகா சித்தர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads