சித்தியர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்தி மக்கள் (Siddi), தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் ஜான்சி கடற்கரை பகுதியில் வாழ்ந்த பாண்டு மக்களில் ஒரு குழுவினராவர். 15ம் நூற்றாண்டின் இறுதியில் இம்மக்களை தக்காணச் சுல்தான்கள் அடிமை வணிகத்தில் வாங்கி[6], தங்கள் இராணுவப் படைகளிலும், கட்டுமானத்திலும் ஈடுபடுத்தினர். கிபி 1676 சித்தியர்கள் ஜாஞ்சிரா இராச்சியத்தை நிறுவி, ராய்கட் மாவட்டம் அருகே அரபிக் கடலில் உள்ள தீவில் தலைநகராக ஜாஞ்சிராக் கோட்டையை நிறுவினர். இம்மக்கள் முகலாயப் பேரரசின் இராணுவத்திலும் பணிபுரிந்தனர். இந்தியப் பிரிவினைப் பின்னர் இம்மக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். இம்மக்களில் பெரும்பான்மையாக சுன்னி இசுலாம் மற்றும் சிறுபான்மையாக இந்து சமயம் மற்றும் கத்தோலிக்கம் பின்பற்றுகிறார்கள்.[7] இம்மக்கள் பலூச்சி, சிந்தி, குஜராத்தி, மராத்தி, கொங்கணி, கன்னடம், தெலுங்கு, உருது மற்றும் இந்தி மொழிகளைப் பேசுகின்றனர். தற்போதைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3 இலட்சம் சித்தியர்கள் வாழ்கின்றனர். கர்நாடகா, குஜராத், ஐதராபாத், கராச்சி பெரும்பாலான சித்தியர்கள் வாழ்கிறார்கள்.[8]இந்திய அரசு இந்து சமயம் பின்பற்றும் சித்தியர்களை பட்டியல் சமூகத்தில் சேர்ட்து, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குகிறது.



Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads