சீதாமரி மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீதாமரி மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் தும்ராவில் உள்ளது. இந்த மாவட்டம் நேபாளத்தை ஒட்டி அமைந்துள்ளது.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
வருவாய் வட்டங்கள்
சீதாமரி மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- சீதாமரி சதர்
- பேல்சந்த்
- பூப்ரி
ஊராட்சி ஒன்றியங்கள்
இம்மாவட்டம் 17 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. அவைகள்:
1. தும்ரா |
2. ருன்னி சேத்பூர் |
3. பரிகார் |
4. பாத்நகா |
5.சோன்பார்சா |
6. பாஜ்பட்டி |
7. சூர்சந்த் |
8. ரிகா |
9.நன்பூர் |
10. பூப்ரி |
11. பைர்கனியா |
12. போக்காரா |
13.சுப்பி |
14. பேல்சந்த் |
15. மேஜர்கஞ்ச் |
16. பர்சௌனி |
17. சாரௌத் |
பொருளாதாரம்
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[2]
மக்கள் தொகை பரம்பல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சீதாமரி மாவட்ட மக்கள்தொகை 34,23,574 ஆகும்.[3] இம்மாவட்டடத்தில் மக்கள்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1491 நபர்கள் வசிக்கின்ரனர்.[3] இம்மாவட்டத்தில் இந்தி மொழி 82.73%, மைதிலி மொழி 3.25% மற்றும் உருது 13.96% பேசுகின்றனர்.[4] மக்கள் தொகையில் இந்துக்கள் 78.06% மற்றும் இசுலாமியர் 21.62% உள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads