செங்கப்பள்ளி

திருப்பூர் மாவட்ட கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

செங்கப்பள்ளி (Chengapalli) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து கிராமம் ஆகும். சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை எண் 544 இல்[1][2]

(முன்னர் தேசிய நெடுஞ்சாலை 47) திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான பகுதி செங்கப்பள்ளியாகும். நெசவுத் தொழிலில் இக்கிராமம் புகழ் பெற்றது. இத்தொழிலுக்காக கிட்டத்தட்ட 5000 மக்கள் பிற பகுதிகளிலிருந்து இங்கு வருகிறார்கள். நான்கு வழி மற்றும் ஆறு வழி சாலைகள் செங்கபள்ளி வழியாகச் செல்கின்றன.

Remove ads

அருகிலுள்ள இடங்கள்

ஏழு கொங்கு-சிவன் கோயில்களில் ஒன்றான அவினாசி பெரிய கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில் (மற்றொரு கொங்கு-சிவன் கோயில்),'மைலா திருப்பதி' என்று குறிப்பிடப்படும் மொண்டிபாளையம் சிறீ பாலாச்சி கோயில், சென்னியாண்டவர் கோயில், தலைக்கரை லட்சுமி நரசிம்ம கோயில், சேவூர் வலேசுவரர் கோயில், செம்பகோவண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில், கருவளூர் மாரியம்மன் கோயில், போத்தம்பாளையம் கருப்பாராயர் கோயில், நடுவச்சேரி கோட்டீசுவரர் கோயில் முதலியன இக்கிராமத்திற்கு அருகிலுள்ள இடங்களாகும்.

Remove ads

போக்குவரத்து

Thumb
செங்கப்பள்ளி-அவினாசி-கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் செங்கப்பள்ளியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. திருப்பூர் இரயில் நிலையம் செங்கப்பள்ளியிலுருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு இரயில்நிலையம் ஏதுமில்லை. இங்குள்ள மக்களுக்கு மாநில அரசு மற்றும் தனியார் துறையால் நடத்தப்படும் பேருந்துகள் போட்டிப் போட்டுக் கொண்டு போக்குவரத்து சேவையை வழங்குகின்றன. இரட்டை நகரங்கள் எனப்படும் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு ஒரு பிராந்திய மையமாக செங்கப்பள்ளியின் புவியியல் இருப்பிடம் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads