செம்னன் மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செம்னன் மாகாணம் (Semnan Province, பாரசீக மொழி: استان سمنان‎, Ostān-e Semnān ) என்பது ஈரானின் 31 மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்கில் உள்ளது, அதன் தலைநகராக செம்னான் நகரம் உள்ளது . செம்னான் மாகாணம் 96,816 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது இந்த மாகாணமானது அல்போர்சு மலைத்தொடர் மற்றும் அதன் தெற்குப் பகுதிகளில் உள்ள டாஷ்-இ காவிர் பாலைவனத்தை எல்லைகளைக் கொண்டுள்ளது.

2014 சூன் 22, அன்று ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்காக மாகாணங்களை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்த மாகாணம் பகுதி ஒன்றின் ஒரு பகுதியாக உள்ளது.[1]

மாகாணத்தின் மாவட்டங்களாக செம்னான் கவுண்டி, அராதன் கவுண்டி, டம்கன் கவுண்டி, ஷாருத் கவுண்டி, மெஹ்திஷாஹ்ர் கவுண்டி, மியாமி கவுண்டி, சோர்கே கவுண்டி மற்றும் கார்ம்சார் கவுண்டி ஆகியவை அடங்கும் . 1996 ஆம் ஆண்டில், மாகாணத்தின் மக்கள் தொகையானது 501.000 (2011 இல் 631.218 ) ஆகும். மேலும் 2005 இல் செம்னன் நகரின் (மாகாணத்தின் தலைநகரம்) மக்கள் தொகையானது 119.778 என்று இருந்தது. மாகாணத்தின் மிகப்பெரிய நகராக ஷாருத் நகரம் உள்ளது. இதன் மக்கள் தொகையானது 231,831 என்று உள்ளது.

Remove ads

நிலவியல்

இந்த மாகாணமானது இரண்டு பகுதிகளாக உள்ளது: ஒரு பகுதி மலைப்பிரதேச பிராந்தியமாகவும், அடுத்தது மலைகளின் அடிவாரத்தில் உள்ள சமவெளி பிராந்தியமாகவும் உள்ளது. மலை பிராந்தியமானது பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவும், கனிமங்கள் நிறைந்திதாகவும் உள்ளது. சமவெளி பிராந்தியமானது ஈரானின் சில பண்டைய நகரங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது பார்த்தியப் பேரரசின் தலைநகரங்களில் ஒன்று அங்கு அமைந்துள்ளது. செம்னன் மக்கள் பேச்சுவழக்கானது சிறப்பு சொற்களைக் கொண்ட வட்டாரவழக்கு கொண்ட உள்ளூர் மொழியைக் கொண்டதாக உள்ளது. இந்த மொழியானது பண்டைய பார்த்தியன் மொழியான பஹ்லவி மொழியில் இருந்து உருவானது.

இந்த மாகாணத்தில் அண்டை மகாகாணங்களாக வடக்கில் கொலெத்தான் மாகாணம் மற்றும் மாசாந்தரான் மாகாணம் மேற்கே தெஹ்ரான் மாகாணம் மற்றும் கொம் மாகாணம் தெற்கில் இசுபகான் மாகாணம் மற்றும் கிழக்கில் இரசாவி கொராசான் மாகாணம் போன்றவை உள்ளன.

அபர் காடு

இந்த காடானது மத்திய மாகாணமான செம்னானில், கோல்ஸ்டான் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது. இது ஈரானில் உள்ள மிகப் பழமையான காடுகளில் ஒன்றாகும், இது மூன்றாவது புவிச்சரிதக்காலத்தின் எச்சமாகும். இந்தக் காடுகள் வழியாக சாலை அமைக்க ஈரானிய சாலைகள் அமைச்சின் முடிவினால் கடந்த ஆண்டு பரவலான ஆர்ப்பாட்டங்கள் நடக்க தூண்டுகோலாக ஆனது. [எப்போது?] ] [ <span title="The time period mentioned near this tag is ambiguous. (October 2012)">எப்போது?</span> நாட்டின் ஊடகங்களின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமைச்சின் முடிவுக்கு எதிராக பரந்த அளவிலான பரப்புரையைத் தொடங்கினர். இதன் முடிவில் வழக்குரைஞர் ஜெனரல் இந்தச் சாலை கட்டுமானத்தை நிறுத்த உத்தரவிடும் சூழலுக்கு வரும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், இந்த முயற்சிகள் அனைத்தும் 2008 ஏப்ரல் மாதம் சாலை அமைக்க சாலை அமைச்சகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக அறிவிக்கப்பட்டபோது வீணானது.   [ மேற்கோள் தேவை ]

Remove ads

வரலாறு

அவெத்தாவின் பழங்காலத்தில் இருந்தே செம்மனானை பதினாறு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மீடியாப் பேரரசு மற்றும் அகாமனிசியப் பேரரசு போன்றவற்றின் காலங்களில், இந்த பேரரசுகளின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றாக இருந்தது, இன்று இது தோராயமாக பண்டைய பிராந்தியமான பார்த்தியாவின் எல்லைகளை ஒத்துள்ளது.

இஸ்லாமிய காலத்தில், கோமஸ் அல்லது கோமேஷின் வரலாற்று பிராந்தியத்தின் ஒரு பகுதியாக செம்னன் இருந்தது. மேலும் பட்டுப் பாதையானது இப்பகுதியின் மையத்தில் சென்றது. இந்த மாகாணம் ஏராளமான போர்களுக்கு சாட்சியாக இருந்தது என்று சொல்ல தேவையில்லை.

ஈரானின் கலாசார வரலாற்று பாரம்பரிய அமைப்பானது செம்னனில் உள்ள அரண்மனைகள், கோட்டைகள், கோட்டையகங்கள், வணிகர் சத்திரங்கள், வரலாற்று எச்சங்கள் போன்ற மரபுவழிச் சொத்துகளாக 470 தளங்களை பட்டியலிடுகிறது. இவை தவிர, பல்வேறு சமய மற்றும் புனித இடங்களும் உள்ளன.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads