சேந்தமங்கலம், விழுப்புரம் மாவட்டம்
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேந்தமங்கலம் (Sendamangalam) என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இவ்வூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 30 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு (மேற்கு சாய்ந்த) தெற்கே 25 கி.மீ தொலைவிலும், பண்ணுருட்டிக்கு (தெற்கு சாய்ந்த) மேற்கே 20 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்ப்பேட்டைக்கு வடகிழக்கே 10 கி.மீ தொலைவிலுமாக இருக்கிறது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 2269 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 10128 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 5242, பெண்களின் எண்ணிக்கை 4886 என உள்ளது. மக்களின் எழுத்தறிவு விகிதம் 62.4 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]
Remove ads
வரலாறு
சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு முனையரையர் மரபு மன்னர்களும், பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர் மரபு மன்னர்களும் அரசோச்சியுள்ளனர். இங்கே எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டளவில் நரசிங்க முனையரையர் மன்னரும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப் பெருஞ்சிங்கக் காடவராயன் ஆட்சிபுரிந்தனர். கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராசராச சோழனைச் சிறை வைத்தது இவ்வூர்க் கோட்டையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads