உளுந்தூர்ப்பேட்டை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உளுந்தூர்பேட்டை (Ulundurpettai), இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், முதல்நிலை நகராட்சி ஆகும். உளுந்தூர்ப்பேட்டை நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
நகராட்சியாக தரம் உயர்த்துதல்
12 செப்டம்பர் 2021 அன்று, உளூந்தூர்பேட்டை பேரூராட்சியை, உளுந்தூர்ப்பேட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3]
பெயர் காரணம்
இந்த ஊருக்கு உளுந்தூர்பேட்டை என்ற பெயர் வந்ததற்கான காரணமாக சொல்லப்படும் கதை; முன்னொரு காலத்தில் ஒரு மிளகு வணிகன் மிளகு மூட்டையுடன் இங்கு வந்தான். இஃது என்ன மூட்டை என்று ஒருவன் கேட்டான். உளுந்து மூட்டை என்று வேடிக்கையாக வணிகன் பொய் சொன்னான். ‘அஃது அப்படியே யாகுக’ என்று மற்றவன் கூறினான். அவ்வாறே மிளகு மூட்டை உளுந்து மூட்டையாயிற்று. அப்படி ஆக்கியவர் சிவன்தான், இது சிவனது திருவிளையாடல் என உணர்ந்த வணிகன், இங்கே சிவனுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்தான் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.[4] உளுந்தூர்ப்பேட்டை நகரம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
விழுப்புரத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ள உளுந்தூர்ப்பேட்டை நகராட்சிக்கு அருகில் அமைந்த உளுந்தூர்பேட்டை தொடர் வண்டி நிலையம், மதுரை - சென்னை இருப்புப் பாதையில், 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
8.6 சகி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும்,110 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி, உளுந்தூர்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சி 5,346 வீடுகளும், 23,734 மக்கள்தொகையும் கொண்டது. இந்நகராட்சியின் எழுத்தறிவு 80.09% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[6]
ஸ்ரீசாரதா ஆசிரமம்
உளுந்தூர்பேட்டையில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அன்னை சாரதா தேவியின் பெயரில் அமைந்த சாரதா மடத்தின் கிளையான ஸ்ரீசாரதா ஆசிரமம் அமைந்துள்ளது.[7] கல்விப்பணியோடு, ஆதரவற்ற சிறுமிகளுக்கான இல்லம், முதியோர் இல்லம், மருத்துவப்பணி, பாரம்பரிய நெல் பாதுகாப்பு போன்ற பல சேவைகளிலும் இவ்வாசிரமத்தின் பங்களிப்புகள் உள்ளன.[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads