ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், ஜிஞ்சாங் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Jinjang MRT station; மலாய்: Stesen MRT Jinjang) என்பது மலேசியா, கோலாலம்பூர், ஜிஞ்சாங் பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.
இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் முதலாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2022 சூன் 16 அன்று திறக்கப்பட்டது.[1] PY10 கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையத்திற்கும்; PY12 செரி டெலிமா எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு PY11 ஆகும்.[2] கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது.[3]
Remove ads
வரலாறு
இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் (தற்போது புத்ராஜெயா வழித்தடம்) இந்த ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. அதன் பின்னர் இந்த ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தின் வடக்குப் பகுதியில் ஓர் உயர்ம்ட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.
ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் சூன் 16, 2022-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[4][5] மேலும் அதே காலக்கட்டத்தில், PY01 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் தொடங்கி PY13 கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம் வரையிலான 12 புத்ராஜெயா வழித்தடத்தின் பிற நிலையங்களும் செயல்படத் தொடங்கின.
Remove ads
நிலைய அமைவு
இந்த நிலையம் கெப்போங் ஜாலான் பெசார் சாலையில், ( மலேசிய கூட்டரசு சாலை 54) அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு அருகில் எனஸ்தா கெப்போங் குடியிருப்பு (Enesta Kepong Residence), பெட்ரோனாஸ் கெப்போங் (Petronas Kepong), தாமான் முத்தியாரா படாசன் (Taman Mutiara Fadason), கெப்போங் தொழில்துறை பகுதி (Kepong Industrial Area), வடக்கு ஜிஞ்சாங் தீயணைப்பு மீட்பு நிலையம் (North Jinjang Fire and Rescue Station) போன்றவை உள்ளன.
Remove ads
நிலைய அமைவிடம்
ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்ட ஒரு நிலையமாகும். தரை மட்டத்திலிருந்து இரண்டு நிலைகளைக் கொண்டு உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டது. முதல் நிலை இணைப்புவழி (Concourse) தளமாகும்; இரண்டாம் நிலையின் மேல் தளத்தில் இரட்டை வழித்தடங்களும்; ஒரு தீவு மேடையில் இரண்டு நடைமேடைகளும் உள்ளன.
ஜிஞ்சாங் நிலைய வழித்தடத்தின் முனையத்திற்குச் செல்ல இரண்டு நடைமேடைகள் உள்ளன; நடைமேடை 1 புத்ராஜெயா சென்ட்ரலுக்கும், நடைமேடை 2 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்திற்கும் பயன்படுத்தப் படுகின்றன.
நிலைய அமைப்பு
L2 எம்ஆர்டி நடைமேடை |
PY தெற்கு திசை | → 12 புத்ராஜெயா → PY41 புத்ராஜெயா சென்ட்ரல் (செரி டெலிமா எம்ஆர்டி நிலையம்) |
PY41 மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ![]() PY04 மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ![]() | ||
PY வடக்கு திசை | ← 12 புத்ராஜெயா → PY04 குவாசா டாமன்சாரா (கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம்) | |
L1 | இணைப்புவழி | கட்டணப் பகுதி, பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம் ![]() |
G | தரை நிலை | நுழைவு/வெளியேறும் வழி, பேருந்து நிறுத்தம், வாடகை தனியார் வாகனங்கள் ![]() |
நிலையத்தின் மேல் பகுதியில் 1 தீவு மேடையில் 2 நடைமேடைகள் உள்ளன.
- நடைமேடை 1 - புத்ராஜெயா சென்ட்ரல்
- நடைமேடை 2 - குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்
Remove ads
பேருந்து சேவைகள்
Remove ads
காட்சியகம்
ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads