ஜூரோங் பறவைகள் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜூரோங் பறவைகள் பூங்கா (Jurong Bird Park) என்பது சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் நகரில் அமைந்துள்ளது ஒரு பறவைக் காட்சியகம் ஆகும்..
இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய பூங்காவாக இருக்கிறது. சிங்கப்பூர் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தப் பறவை பூங்கா, 0.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (49 ஏக்கர்) ஜுரோங் மலையின் மேற்குச் சரிவில் அமைந்துள்ளது. ஜூரோங் பகுதியின் மிக உயரமான பகுதியில் இப்பூங்கா அமைந்துள்ளது.[3][4]
Remove ads
வரலாறு
நிரந்தரமான பறவைகள் காட்சியக யோசனை முதன்முதலாக 1968ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நிதி அமைச்சராக இருந்த கோக் கெங் சுய் என்பவரால் முன்மொழியப்பட்டது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உலக வங்கிக் கூட்டத்தில் கோக் கெங் சுய் கலந்துகொள்ள சென்றபோது அந்நாட்டின் விலங்கியல் பூங்காவிற்கு பயணம் செய்தார். அப்பொழுது தோன்றிய யோசனையின் விளைவாகவே இப்பூங்கா துவங்குவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூரர்களுக்கு நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து விலகி இயற்கையுடன் ஓய்வெடுக்கக்கூடிய இடமாக இப்பூங்கா இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.[5] 1969ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பறவைகள் பூங்கா அமைப்பதற்கான வேலை தொடங்கியது. ஜூரோங்கில் உள்ள புக்கிட் பெரோபோக்கின் மேற்கு சரிவில், இந்த திட்டத்திற்காக 35 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[6] பறவை பூங்கா பணிகள் 1969ஆம் ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[7] இருப்பினும் பணிகள் முடிந்து சனவரி 3, 1971-இல், 3.5 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட ஜூரோங் பறவைகள் பூங்கா பொது மக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.[8]
Remove ads
காட்சிகள்
ஆப்பிரிக்க நீர்வீழ்ச்சி நடைபாதை
ஆப்பிரிக்க நீர்வீழ்ச்சி நடைபாதை பறவைக்காட்சியானது 2 ஹெக்டர் (4.9 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது நடைபாதை பறவைக் காட்சியாகும். 50க்கும் மேற்பட்ட சிற்றினங்களை சேர்ந்த 600 சுதந்திரமாக பறந்து திரியும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன. 30 மீட்டர் (98 அடி) உயரத்துடன் உலகின் உயரமான மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஜுராங் நீர்வீழ்ச்சி இருக்கிறது.
டைனோசர் வம்சாவளியின பறவைகள் காட்சி
பூங்காவின் ஓரத்தில் டைனோசர்களின் முன்னோடிகளான பறக்க இயலா பறவைகளின் காட்சிக்கூடம் அமைந்துள்ளது. இங்கு தீக்கோழி, ஈமு, நியூ கினியத் தீக்கோழி ஆகிய உள்ளிட்ட பல பறவைகள் காணப்படுகின்றன.
தென் கிழக்காசிய நாட்டுப் பறவைகளின் நடைபாதை காட்சி
இங்கு தென் கிழக்காசிய நாட்டுப் பறவைகள் மரங்களில் சுதந்திரமாக திரியவிடப்பட்டுள்ளன.
மர மேம்பால நடைபாதை
32,000 சதுர அடியில் பூங்காவை மேலிருந்து பார்க்கக்கூடிய வகையில் மர மேம்பால நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வண்ணக்கிளிகள் மற்றும் குறுங்கிளிகள் காணப்படுகின்றன.
பென்குயின் காட்சியறை
1.600 சதுர மீட்டரில் 69 அடி உயர வெப்பநிலை மாற்றக்கூடிய உள்ளரங்கில் ஐந்து வகையான பென்குயின் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Remove ads
பறவைகளின் பட்டியல்
- பாலி மைனாக்குருவி
- குக்குறுவான்
- கருப்பு இருவாட்சி
- கருஞ்சிவப்பு சின்னப் பஞ்சுருட்டான்
- பெருங்கொண்டைக் கிளி
- சைபீரிய நாரை
- புறா
- விசில் வாத்து
- மாண்டரைன் வாத்து
- வெண்முக மர வாத்து
- வெண்குருகு
- கிளி
- அமெரிக்க பூநாரை
- பெரும்பூநாரை
- சிறும்பூநாரை
- மலை மைனா
- இந்திய பல்வண்ண இருவாட்சி
- அழகிய இறகுகளையுடைய சிறு கோழி
- சூறைக்குருவி
- குறுங்கிளி
- பஞ்சவர்ணக்கிளி
- நொள்ளைமடையான் நாரை
- வயல் ஆந்தை
- மீன் ஆந்தை
- பெரிய சாம்பல் ஆந்தை
- கூழைக்கடா
- பெரு வெள்ளை கூழைக்கடா
- பென்குயின்
- சிவப்பு அரிவாள்மூக்கன்
- துடுப்புமூக்கு நாரை
- மஞ்சட்குருவி
- அகலவாய்நாரை
- வெள்ளை நாரை
- செம்பழுப்பு நாரை
- மஞ்சள் நாரை
- அன்னம்
- ஊமை அன்னம்
- பெரிய ஆப்பிரிக்க பறவை
- அமேசான் பறவை
- கடல் கழுகு
- நிக்கோபார் புறா
படங்கள்
- வெண்குறுகு
- நிக்கோபார் புறா
- கருப்பு தோகை சூறைக்குருவி
- பெருங்கிளி
- கூழைக்கடா
- ஜூரோங் பூங்காவின் முகப்பு
- அரிவாள் மூக்கன்
- பஞ்சவர்ணக்கிளி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads