டாமன்சாரா நகர மையம்

கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தில் ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

டாமன்சாரா நகர மையம்map
Remove ads

டாமன்சாரா நகர மையம், (ஆங்கிலம்: Damansara Town Centre; மலாய்: Pusat Bandar Damansara; சீனம்: 白沙罗镇中心); என்பது மலேசியா, கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான புறநகர்ப் பகுதி ஆகும். இந்த நகர மையத்தின் கட்டிடங்கள் 1981 - 1984-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டன. இருப்பினும் 2016-இல், நகரத்தின் புதிய மேம்பாட்டிற்காக அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.[2]

விரைவான உண்மைகள் டாமன்சாரா நகர மையம், நாடு ...

டாமன்சாரா நகர மையத்தில் அமைந்துள்ள அலுவலகங்களில் அரசு அமைச்சுகள், அரசு சார்ந்த துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவை அடங்கும்.

Remove ads

பின்னணி

டாமன்சாரா நகர மையத்தின் அசல் கட்டிடங்களில் டாமன்சாரா வீடமைப்பு நிறுவனம், இண்டா வாட்டர் கூட்டமைப்பு (en:Indah Water Konsortium), எல்ப் பல்கலைக்கழகக் கல்லூரி (en:HELP University) மற்றும் ஜொகூர் கார்ப்பரேசன் (J-Corp) போன்ற பிற நிறுவனங்களின் கட்டிடங்களும் உள்ளன.

மலேசிய குடிவரவு துறை மற்றும் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு போன்ற அரசு துறைகள் முன்பு இங்கு தங்களின் அலுவலகங்களைக் கொண்டிருந்தன, பின்னர் அவை புத்ராஜெயாவிற்கு மாற்றப்பட்டன. அதே வேளையில் மலேசிய குடிவரவு துறையின் கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு புடு சென்ட்ரலுக்கு மாற்றப்பட்டன. உணவகங்கள், வசதி பொருட்கள் கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை தரை தளங்களில் உள்ளன.

Remove ads

போக்குவரத்து

பொது போக்குவரத்து

டாமன்சாரா நகர மையம் 9 காஜாங் வழித்தடத்தின் இரண்டு நிலையங்களால் சேவை செய்யப்படுகிறது:[3]

  •  KG13  பண்டார் டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
  •  KG14  செமந்தான் எம்ஆர்டி நிலையம்

டாமன்சாரா நகர மையம் 3 4 அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடத்தின் வழியாகவும் சேவை செய்யப்படுகிறது.

பேருந்து

டாமன்சாரா பேருந்து வழித்தடத்தின் ரேபிட் கேஎல் T819  பேருந்து சேவை:

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads