தங்க மனசுக்காரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
Script error: The module returned a nil value. It is supposed to return an export table. தங்க மனசுக்காரன் (Thanga manasukkaaran) 1992 ஆம் ஆண்டு முரளி, சிவரஞ்சனி நடிப்பில், இளையராஜா இசையில், இராஜவர்மன் இயக்கத்தில், ஆர். தனபாலன் தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3]
கதைச் சுருக்கம்
பாடாகரான முருகேஷ் என்கிற முருகன் (முரளி) தன் இசைக்குழுவுடன் ஒரு கிராமத்திற்கு வருகிறான். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கிளி (சிவரஞ்சனி) பல வருடங்களுக்கு முன் சிறுவயதில் காணாமல்போன தன் காதலன் முருகனுக்காகக் காத்திருக்கிறாள். அவளது உறவினரான துரைப்பாண்டி (ஜி. எம். சுந்தர்) அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். செல்லக்கிளி யாருக்காக காத்திருக்கிறாளோ தொலைந்துபோன அவளின் காதலன் தான்தான் என்று அவளுக்குப் புரியவைக்கிறான் முருகேஷ். மேலும் தான் ஊரைவிட்டுச் சென்றதற்கானக் காரணத்தையும் அவளிடம் கூறுகிறான்.
கடந்தகால கதை: செல்லக்கிளியின் தந்தை (விஜயகுமார்) அவளை ஆதரவற்ற அனாதையாக இருந்தாலும் நல்லவனான முருகனுக்குத் திருமணம் செய்ய விரும்புகிறார். செல்லக்கிளியின் அத்தை யசோதை (சி. ஆர். சரஸ்வதி) தன் மகன் துரைப்பாண்டிக்கு செல்லக்கிளியைத் திருமணம் செய்ய விரும்புகிறாள். எனவே சிறுவயதிலேயே முருகனை மிரட்டி ஊரைவிட்டுத் துரத்துகிறாள். ஊரை விட்டு போன முருகன் பாடகனாகிறான். தன் காதலி செல்லக்கிளியை மறக்க முடியாததால் அவளைத் தேடிவருகிறான்.
முருகன் திரும்பிவந்ததை அறியும் துரைப்பாண்டி மற்றும் யசோதை இருவரும் செல்லக்கிளியின் தந்தையிடம் முருகன் யார் என்பதை மறைத்து, எங்கிருந்தோ வந்த அவனை செல்லக்கிளி காதலிக்கிறாள் என்று பொய்யுரைக்கின்றனர். இதையறிந்த அவள் தந்தை முருகனைப் பற்றிய உண்மையறியாமல் அவர்கள் காதலை எதிர்க்கிறார். இறுதியில் முருகேஷ் - செல்லக்கிளி திருமணம் நடந்ததா? என்பதே முடிவு.
Remove ads
நடிகர்கள்
- முரளி - முருகேஷ் என்ற முருகன்
- சிவரஞ்சனி - செல்லக்கிளி
- விஜயகுமார் - செல்லக்கிளியின் தந்தை
- கவுண்டமணி
- செந்தில் - சுண்டல்
- சி. ஆர். சரஸ்வதி - யசோதை
- எம். என். நம்பியார் - சதா சுவாமி
- எஸ். என். லட்சுமி - செல்லக்கிளியின் பாட்டி
- பயில்வான் ரங்கநாதன்
- ஷர்மிலி - மூக்கம்மா
- ரமேஷ்குமார்
- ரஞ்சித்
- குள்ளமணி
- சகாதேவன்
- மகாதேவன்
இசை
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கைஅமரன், காமகோடியன், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[4][5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads