தசார்ன நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தசார்ன நாடு (Dasarna Kingdom) பண்டைய பரத கண்ட நாடுகளில், இந்தியாவின் மத்தியிலும், மேற்கிலும் யாதவர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றாகும். தசார்ன நாடு, மத்திய இந்தியாவின், தற்கால மத்திய பிரதேசத்தின் வடக்கில் அமைந்திருந்தது.

மகாபாரதக் குறிப்புகள்
தசார்ன நாட்டு மன்னர் சுதாமன்
தசார்ன நாட்டு மன்னர் சுதாமனின் இரண்டு மகள்களில் ஒருவரை சேதி நாட்டு மன்னர் வீரபாகு எனும் சுவாகு மணந்தார். மற்றொரு மகளை, விதர்ப்ப நாட்டு மன்னர் வீமன் மணந்தார். வீமனின் மகளான புகழ்பெற்ற தமயந்தி, நிசாத நாட்டு இளவரசன் நளனை மணந்தவள் ஆவாள். [1][2]
தசார்ன நாடும் சிகண்டியும்
தசார்ன நாட்டு மன்னர் இரண்யவர்மனின் மகளை மணந்த பாஞ்சால நாட்டு இளவரசன் சிகண்டி, ஒரு திருநங்கை என்பதை அறிந்த தர்சன நாட்டு மன்னர், சிகண்டி மீது வெறுப்புற்றான். இதனால் மனம் உடைந்த சிகண்டி தற்கொலை செய்ய முயற்சித்த போது, ஒரு வானுலக யட்சனால், ஆதரிக்கப்பட்டு ஆண் மகனாக மாறினான்.[3] [4]
தசார்ன நாட்டு மன்னரை வென்ற வீமன்
தருமராசவின் இராசசூய வேள்விக்கான நிதி திரட்ட, வீமன் இந்திரப்பிரஸ்தத்தின் தெற்கில் உள்ள நாடுகளின் மீது படையெடுத்து திறை வசூலிக்கையில், தசார்ன நாட்டு மன்னரையும் வென்று பெரும் பொருட்களை திறையாகப் பெற்றான். (மகாபாரதம் 2: 28)
Remove ads
குருச்சேத்திரப் போரில்
தசார்ன நாட்டுப் படைகள், குருச்சேத்திரப் போரில், பாண்டவர் அணியின் சார்பாக நின்று கௌரவர் அணிக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம் 6:96 & 7: 24)
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
