தஞ்சோங் தொக்கோங்

பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி From Wikipedia, the free encyclopedia

தஞ்சோங் தொக்கோங்map
Remove ads

தஞ்சோங் தொக்கோங் (ஆங்கிலம்: Tanjung Tokong; மலாய் மொழி: Tanjong Tokong; சீனம்: 丹绒道光; ஜாவி: تنجوڠ توكوڠ) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும்.

விரைவான உண்மைகள் தஞ்சோங் தொக்கோங், நாடு ...

இந்தத் தஞ்சோங் தொக்கோங் புறநகர் குடியிருப்புப் பகுதி, பினாங்கு தீவின் வடக்கு கடற்கரையில் புலாவ் திக்குஸ் (Pulau Tikus) நகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அதே வேளையில் ஜார்ஜ் டவுன் நகர மையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. (2.5 மைல்) வடமேற்கில் உள்ளது.

Remove ads

பொது

இந்த நகர்ப்பகுதி 1970-ஆம் ஆண்டுகள் வரை ஒரு மீன்பிடிக் கிராமமாக இருந்தது. இருப்பினும் இங்கு பல பத்தாண்டுகளாக நகரமயமாக்கல் நடைபெற்று வருகிறது. அதனால் இங்குள்ள கடற்கரைப் பகுதியில் உயரமான கட்டடங்கள் அதிகமாய்த் தோன்றி உள்ளன.[1]

1786-ஆம் ஆண்டில் பிரித்தானிய கடல்படைத் தளபதி பிரான்சிஸ் லைட்; பினாங்கு தீவை நிறுவுவதற்கு முன்பு இருந்தே பல காலமாக இப்பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர். பினாங்கு தீவில் முதல் சீன குடியேற்றத்தின் தளமாகத் தஞ்சோங் தொக்கோங் நம்பப் படுகிறது.[2]

தற்போது, தஞ்சோங் தொக்கோங்கின் கரையோரத்தில் நில மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு ஸ்ரீ தஞ்சோங் பினாங்கு (Seri Tanjung Pinang) எனும் ஒரு புதிய நகரம் உருவாக்கப்பட உள்ளது.[3]

2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியின் போது (2004 Indian Ocean Tsunami) தஞ்சோங் தொக்கோங் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த ஆழிப்பேரலை 52 உயிர்களைப் பலிகொண்டது.[4]

Remove ads

வரலாறு

18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஜாங் லி (Zhang Li) என்ற பெயருடைய ஒரு சீனர் இப்போதைய தஞ்சோங் தொக்கோங்கில் ஒரு மீன்பிடி கிராமத்தை நிறுவினார். அவர் உண்மையில் சீனாவில் இருந்து சுமத்திராவுக்குப் பயணம் செய்ய நினைத்து இருந்தார். ஆனால் மோசமான கடல் அலைகள் அவரைப் பினாங்கு தீவுக்கு கொண்டு வந்துவிட்டன.[5][6]

1786-ஆம் ஆண்டில் பிரித்தானிய கடல்படைத் தளபதி பிரான்சிஸ் லைட் (Captain Francis Light); பினாங்கு தீவில் தரை இறங்குவதற்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தஞ்சோங் தொக்கோங்கில் ஜாங் லி தடம் பதித்து விட்டார்.

தஞ்சோங் தொக்கோங்கில் ஜாங் லியின் கல்லறை இன்றும் உள்ளது. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சீன இனத்தவர்களால் துவா பெக் காங் (Tua Pek Kong) எனும் குல தெய்வமாக அவர் வணங்கப் படுகிறார்.

Remove ads

காட்சியகம்

Thumb
ஸ்ரீ தஞ்சோங் பினாங்கு உருவாக்கம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads