தஞ்சோங் மானிஸ் மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தஞ்சோங் மானிஸ் மாவட்டம்map
Remove ads

தஞ்சோங் மானிஸ் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Tanjung Manis; ஆங்கிலம்: Tanjung Manis District; சீனம்: 丹绒马尼斯县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; முக்கா பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[2] மாவட்டத்தின் தலைநகரம் தஞ்சோங் மானிஸ் நகரம் ஆகும்.[3]

விரைவான உண்மைகள் தஞ்சோங் மானிஸ் மாவட்டம் Tanjung Manis DistrictDaerah Tanjung Manis, நாடு ...

தஞ்சோங் மானிஸ் மாவட்டம் 7 ஏப்ரல் 1973-இல் பெலவாய் துணை மாவட்டம் என்று பெயரிடப்பட்டது; மற்றும் சரிக்கே பிரிவின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டது.[2] 1 மார்ச் 2002 அன்று, பெலவாய் துணை மாவட்டம் முக்கா பிரிவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

Remove ads

பொது

11 பிப்ரவரி 2008 அன்று, சரவாக் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பெருவழி (Sarawak Corridor of Renewable Energy ) தொடங்கப்பட்டது.[4] பின்னர் இங்கு தஞ்சோங் மானிஸ் ஒருங்கிணைந்த துறைமுகம் கட்டப்பட்டது.

1 ஆகஸ்டு 2015 அன்று, பெலவாய் துணை மாவட்டம் ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டு தஞ்சோங் மானிஸ் மாவட்டம் என மறுபெயரிடப்பட்டது.[5]

தஞ்சோங் மானிஸ் நகரம் சிபு நகரத்தில் இருந்து 82 கி.மீ. தொலைவிலும்; தஞ்சோங் மானிஸ் வானூர்தி நிலையத்தில் இருந்து 19.5 கி.மீ. தொலைவிலும்; சரிக்கே நகரில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[6]

Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads