தபகேசுவர் கோவில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads

தபகேசுவர் கோயில் (Tapkeshwar Temple) என்பது தபகேசுவர் மகாதேவ் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது தேராதூனில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் தன்சு ஆற்றின் கரையில் உள்ளது. இது ஒரு இயற்கை குகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது கோயிலின் முக்கிய சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது.[1][2]
Remove ads
வரலாறு
தபகேசுவர் கோயில் 6,000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.[3] இது குகையில் ஒரு இயற்கையான சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது. இது உள்ளூர் மக்களின் மரியாதைக்குரிய இடமாக மாறியது.
இந்து இதிகாசமான மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் ஆசிரியரான துரோணாச்சாரியாரால் இது ஒரு வசிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. இவர் பெயராலேயே இந்த குகை துரோண குகை என்று அழைக்கப்படுகிறது.[2][4] துரோணாச்சாரியாரின் மனைவி கல்யாணி தனக்குப் பிறந்த மகன் அசுவத்தாமாவுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.[3] துரோணர் பசு அல்லது பசுவின் பால் வாங்க முடியாததால், அசுவத்தாமா சிவனிடம் பிரார்த்தனை செய்தார், பின்னர் குகையில் உள்ள சிவலிங்கத்திலிருந்து சொட்டிய பாலினை தனது மகனுக்கு ஊட்டினார்.[3]
Remove ads
செயல்பாடுகள்
இந்த கோவில் தேராதூனில் சுற்றுலாத் தலமாகவும், புனித யாத்திரை தலமாகவும் பிரபலமாக உள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு அருகிலுள்ள கந்தக நீர் ஊற்றுகளில் குளிப்பார்கள்.[3]
மலைகளால் சூழப்பட்ட துரோணா குகை, தேராதூன் மற்றும் அருகிலுள்ள மாவட்ட சுற்றுலாப் பயணிகளுக்குப் பிரபலமான இடமாகும்.[2]
நிகழ்வுகள்
இக்கோயிலில் சிவராத்திரியில் திருவிழா நடைபெறுகிறது.[4][3][5][6] கோவில் குழுவினர் பக்தர்களுக்கு இலவச உணவு ஏற்பாடு செய்து வருகின்றனர்.[3]
ஒவ்வொரு ஆண்டும் ஹோலி அன்று, உள்ளூர் நாடகக் குழுவான ஹமாரி பெஹ்சான், கோவிலில் தங்கள் விடுமுறை நிகழ்ச்சியைத் தொடங்குகிறது[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads