தமிழ் வளர்ச்சித் துறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்காகத் தமிழ் வளர்ச்சித் துறை எனும் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைக்கெனத் தனி இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டது.[2]
Remove ads
வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது. ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் என். வெங்கடேசன் பொறுப்பேற்றார்.
ஆட்சிமொழிக் குழுவில் கீழ்க்காண்பவர்கள் தொடர்ந்து பணியாற்றினர்.
- எஸ்.வெங்கடேசுவரன், இ.கு.ப.(1957-63)
- சி.எ. இராமகிருட்டினன், இ.கு.ப.(1963-65)
- வி. கார்த்திகேயன், இ.ஆ.ப.(1965-68)
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும், ஆட்மொழித் திட்டச் செயலாக்கத்திற்கு உறுதுணையான ஆட்சிச் சொல் அகராதியினை வளப்படுத்துவதற்கான அறிவுரையும் வழங்கியது. 1971-ஆம் ஆண்டில் 28.5.1971 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி தமிழ் வளர்ச்சி இயக்ககம் என்ற புதிய துறை ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அத்துறையிடம் இப்பணிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி இயக்குநர் தலைமையில் தொடர்ந்து இயங்கிவருகிறது.[3]
Remove ads
பணிகள்
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசின் தமிழ் சார்ந்த பணிகளை கீழ்க்காணும் அமைப்புகளின் வழியாகச் சிறப்பாகச் செய்து வருகிறது.
தமிழ்ச் சாலை செயலி
தமிழ் வளர்ச்சித் துறை செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ்ச் சாலை (Tamil Saalai) என்னும் ஆண்டிராய்டு செயலி 2019 ஆகத்து 24 இல் தொடங்கப்பட்டது.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads