தம்போவ் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தம்போவ் மாகாணம் (Tambov oblast, உருசியம்: Тамбо́вская о́бласть, தம்போவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் தம்போவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 1,091,994.[9]
Remove ads
புவியியல்
தம்போவ் ஓப்லஸ்து புல்வெளி காடுகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது இதன் எல்லைகளாக ரயாசன் ஒப்லாஸ்து, பென்சா ஒப்லாஸ்து, சராத்தவ் ஓப்லஸ்து, வரனியோஷ் ஒப்லாஸ்து, லிபெட்ஸ்க் ஒப்லாஸ்து ஆகியவை அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு
ஓப்லஸ்தின் மக்கள் தொகை: 1,091,994 ( 2010 கணக்கெடுப்பு ); 1,178,443 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,320,763 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
2012 ஆண்டைய முதன்மை புள்ளிவிவரம்
- பிறப்பு: 10,394 (1000 க்கு 9.6)
- இறப்பு: 17,386 (1000 க்கு 16.1) [13]
மொத்த கருத்தரிப்பு விகிதம்[14]
- 2009: 1.31
- 2010: 1.34
- 2011: 1.33
- 2012: 1.42
- 2013: 1.42
- 2014: 1.48 (கணிப்பு)
இனக்குழு விகிதாச்சாரம் (2010)[9]
- உருசியர்கள் : 97%
- உக்ரைனியர்கள் : 0.7%
- ஆர்மேனியர்கள் : 0.4%
- ரோமா மக்கள்
- மற்றவர்கள்: 1.5%
- உருசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 22.708 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை.[15]
Remove ads
சமயம்
2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[16] தம்போவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 78.4% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் இந்த மதப்பிரிவினர் உருசிய கூட்டமைப்பின் இந்த ஒப்லாஸ்துவில் தான் மிகுதியான விகிதாச்சாரத்தில் வாழ்கின்றனர். 1% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 7% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர், 10% நாத்திகர்கள், 3.6% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[16]
பொருளாதாரம்
ரசியத் தென்கிழக்கு ரயில்வே மிச்சூரின்ஸ்க் வழியாக சென்று தெற்கு பகுதிகளையும் மையப் பகுதிகளையும் இணைக்கிறது. இங்கு கால்நடை வளர்ப்பில் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புத் தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads