தலவாக்கலை

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia

தலவாக்கலை
Remove ads

6°56′56″N 80°39′43″E

விரைவான உண்மைகள்

தலவாக்கலை (Talawakelle) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் நுவரெலியா நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் கொட்டகலைக்கும் நானு ஓயாவுக்குமிடையே அமைந்துள்ளது. இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கொட்டகலை, வட்டகொடை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறான கொத்மலை ஓயா இந்கரை ஒட்டி பாய்கிறது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் தலவாக்கலை-லிந்துலை இணைந்த நகரசபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் தேயிலைத் துறையில் முக்கிய நகரங்களில் ஒன்றான தலவாக்கலையில் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது[1]. இயற்கை அழகு மிக்க இப்பிரதேசத்தில் டெவோன், புனித கிளயார் , புனித அன்றுவ் போன்ற இலங்கையின் பிரசித்தமான நீர்வீழ்ச்சிகள் பல் அமைந்துள்ளன. யப்பான் நாட்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் காரணமாக நகரின் பெரும் பகுதி நீருள் மூழ்கவுள்ளதால் நகரை வேறு பிரதேசத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Remove ads

ஆதாரம்

படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads