தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது தாமான் ஜெயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Taman Jaya LRT Station; மலாய்: Stesen LRT Taman Jaya; சீனம்: 再也公园) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது.[3]
அந்தக் கட்டமைப்புப் பிரிவில் கோலாலம்பூர் சென்ட்ரல் சேர்க்கப்படவில்லை. தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தான் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கான பராமரிப்பு கிடங்கு லெம்பா சுபாங் புறநகர்ப்பகுதியில் உள்ளது.
Remove ads
அமைவு
தாமான் ஜெயா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் புதிய பிரிவான பிரிவு 52-க்கு நேர் வடக்கே அமைந்துள்ளது; மற்றும் பல நகராட்சிக் கட்டிடங்கள்; பெட்டாலிங் ஜெயா சதுக்கம்; ஆகியவற்றுக்கு அருகிலும் அமைந்துள்ளது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா பிரிவு 9, 10 மற்றும் 11-க்கு நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது.[4]
பெட்டாலிங் ஜெயா பிரிவு 10-இல் உள்ள ஜெயா பூங்கா (Jaya Park) என்பதிலிருந்து இந்த நிலையம் அதன் பெயரைப் பெற்றது. ஜெயா பூங்கா என்பது ஓர் ஏரித் தோட்டம்; மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் நிறுவப்பட்ட முதல் பூங்கா ஆகும்.
மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த நிலையம், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைக்கு மிக அருகில், அதாவ்து 440 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Remove ads
அமைப்பு
தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; நிலத்தடியில் ஒரு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என மூன்று நிலைகள் உள்ளன.
இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன.
அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது.
Remove ads
கிளானா ஜெயா வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[5]
மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன.
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads