தாய்லாந்து மாநிலங்கள்

தாய்லாந்து நாட்டில் உள்ள அரசாங்க நிர்வாக நிலப்பகுதிகள் From Wikipedia, the free encyclopedia

தாய்லாந்து மாநிலங்கள்
Remove ads

தாய்லாந்து மாநிலங்கள் (ஆங்கிலம்: Provinces of Thailand; தாய்: จังหวัดของประเทศไทย); என்பது தாய்லாந்து நாட்டில் உள்ள அரசாங்க நிர்வாக நிலப்பகுதிகள் ஆகும். அந்த அமைப்பில் தாய்லாந்தில் உள்ள 76 மாநிலங்களும் (தாய்: จังหวัด; ஆங்கிலம்: Changwat); புரோவின்சுகள் (Provinces) எனப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகின்றன.[3]

விரைவான உண்மைகள் தாய்லாந்து மாநிலங்கள்Provinces of Thailand จังหวัดของประเทศไทย, வகை ...

மற்றும் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி (ஆங்கிலம்: Bangkok Special Administrative Area; தாய்: เขตปกครองส่วนท้องถิ่นรงถิ่นรูปแบษ), தாய்லாந்து தலைநகர் பாங்காக் (Bangkok) மாநகரைக் குறிக்கும் நிர்வாகப் பகுதியாகும்.[4][5] அனைத்து மாநிலங்களும் தாய்லாந்து நாட்டின் முதன்மையான உள்ளாட்சி அரசுகள்.

Remove ads

பொது

தாய்லாந்து நாட்டின் மாநிலங்கள் (Provinces); முதல் நிலையில் ஆம்போ (Amphoe) எனும் மாவட்டங்களாக (Districts) பிரிக்கப் படுகின்றன. இரண்டாம் நிலையில் தம்போன் (Tambon) எனும் துணை மாவட்டங்களாக (Sub Districts) பிரிக்கப் படுகின்றன. பின்னர் இந்தத் துணை மாவட்டங்கள் உள்ளாட்சி அரசுகளாக இயங்குகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் ஓர் ஆளுநரால் (ஆங்கிலம்: Phu Wa Ratchakan Changwat; தாய்: ผู้ว่าราชการจังหวัด) நிர்வாகம் செய்யப்படுகிறது. மாநில ஆளுநர்கள் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப் படுகிறார்கள்.

Remove ads

தாய்லாந்து இராச்சியம்

தாய்லாந்து (ஆங்கிலம்: Thailand அல்லது Kingdom of Thailand; தாய்: ประเทศไทย), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (ஆங்கிலம்: Siam, தாய்: สยาม) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.

இந்த நாட்டின் வடக்கில் மியான்மர், லாவோஸ்; கிழக்கில் லாவோஸ், கம்போடியா; தெற்கில் தாய்லாந்து வளைகுடா, மலேசியா; மேற்கில் அந்தமான் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடா; வியட்நாம், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன.

சயாம்

1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வப் பெயர் சயாம் ஆகும்.[6] பின்னர் இது தாய்லாந்து என மாற்றம் கண்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டது. மீண்டும் 1949 மே 12-ஆம் தேதி தாய்லாந்து என மாற்றம் கண்டது.

தாய்லாந்து மன்னர் அந்த நாட்டின் அரசுத் தலைவர்; இராணுவப் படைகளின் தலைவர்; பௌத்த மதத்தை உயர்நிலைப் படுத்துபவர்; அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.

Remove ads

தாய்லாந்து மாநிலங்கள்

Thumb
தாய்லாந்தில் உள்ள 76 மாநிலங்கள்
மேலதிகத் தகவல்கள் சின்னம், பெயர் ...
  • 31 டிசம்பர் 2019-இல் தாய்லாந்தின் மொத்த மக்கள் தொகை 66,558,935 ஆகும்.[1]
  • தாய்லாந்தின் மொத்த நிலப்பரப்பு 517,646 km2 (2013-இல்)[2]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads