தித்திவாங்சா மலைத்தொடர்

From Wikipedia, the free encyclopedia

தித்திவாங்சா மலைத்தொடர்
Remove ads

தித்திவாங்சா மலைத்தொடர்; (மலாய்: Banjaran Titiwangsa; ஆங்கிலம்: Titiwangsa Mountains) என்பது தீபகற்ப மலேசியாவின் மத்தியமலைத் தொடராகும். இந்த மலைத் தொடர் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் தித்திவாங்சா மலைத்தொடர்Titiwangsa Mountains மலேசியா தாய்லாந்து, உயர்ந்த புள்ளி ...
Thumb
சிலிம் ரீவர் நகருக்கு அருகில் காட்சி அளிக்கும் தித்திவாங்சா மலைத்தொடர்

இதன் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது. இதனைச் சங்காலாகிரி தொடர் (ஆங்கிலம்: Sankalakhiri Range; தாய்லாந்து மொழி: ทิวเขาสันกาลาคีรี) என்றும் அழைக்கிறார்கள். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும்.

Remove ads

நிலவியல்

தித்திவாங்சா மலைத்தொடர், தாய்லாந்து மலேசியாவின் புவிப்பிளவு மண்டலமாகவும் (Suture Zone) விளங்குகிறது. வட தாய்லாந்தில் நான் எனும் மாநிலத்தின் உத்தாராடிட் எனும் இடத்தில் தொடங்கி, கீழ் நோக்கிப் படர்ந்து நீடித்து மலேசியாவின் பகாங் ரவுப் மாநிலத்தில் முடிவுறுகிறது.

தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தித்திவாங்சா மலைத்தொடர், சிம்மெரி (Cimmerian Plate) நிலத் தட்டைச் சேர்ந்ததாகும்.[1] இந்த நிலத்தட்டு இந்தோசீனா நாடுகளை இணைக்கும் நிலத் தட்டாகும். தித்திவாங்சா மலைத்தொடரின் கிழக்குப் பகுதி, சினோபர்மலாயா பாறை பெருநிலப்பகுதியுடன் (Sinoburmalaya Continental Terranes) இணைந்துள்ளது.[2][3]

சிம்மெரி நிலத் தட்டு 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், திவானியக் காலத்தில் (Devonian) , காண்டுவானா (Gondwana) பெரும் நிலப்பகுதியில் இருந்து பிரிந்தது. 280 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், பேர்மியன் காலத்தில் லாவ்ராசியா (Laurasia) பெருநிலப்பகுதியில் இணைந்து கொண்டது. அந்த நிலப் பகுதியில் தான், இப்போதைய தாய்லாந்து, பர்மா, லாவோஸ், கம்போடியா நாடுகள் உள்ளன. தீபகற்ப மலேசியாவின் மேற்கு பகுதியும் இங்கேதான் அமைந்து இருக்கிறது.

சினோபர்மலாயா பெருநிலப்பகுதி

காண்டுவானா (Gondwana) பெருநிலப்பகுதியில் இருந்து பிரிந்த சினோபர்மலாயா பெருநிலப்பகுதி, 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், இந்தோசீனா பெருநிலப் பாறைகளுடன் இணைந்தது. அதனால், அந்தக் காலக் கட்டத்தில் இருந்த பாலியோ-தெதைஸ் பெருங்கடலும் (Paleo-Tethys Ocean) மூடிப் போனது; நவீன கால தித்திவாங்சா மலைத்தொடரும் உருவானது.

பாலியோ-தெதைஸ் பெருங்கடலில் தான் இப்போதைய இந்தியா, இந்தோனேசியா, இந்தியப் பெருங்கடல் போன்ற நிலப்பகுதிகள் இருந்தன.சிம்மெரி நிலத் தட்டில் துருக்கி, ஈராக், திபெத் நாடுகளும் இருந்தன. பாலியோ-தெதைஸ் பெருங்கடல் தான் இப்போது சுருங்கிப் போய் மத்தியதரைக் கடல் என பெயர் பெற்று இருக்கிறது.

Remove ads

புவியியல்

தித்திவாங்சா மலைத்தொடர், தெனாசிரிம் மலைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4] இந்தோ மலாயன் மலைத் தொடர்கோவையின் தென்கோடியில் தொடங்கி திபெத், கிரா குறுநிலம் வழியாக தீபகற்ப மலேசியாவை அடைகிறது.[5][6]

தித்திவாங்சா மலைத்தொடர், தாய்லாந்தின் சங்காலாகிரி மலைத் தொடரின் வட பகுதியில் தொடங்குகிறது. பின்னர், வட மேற்கில் இருந்து தென் கிழக்காகப் படர்ந்து, மலேசிய எல்லையைக் கடந்து, தெற்கே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செலுபு மாவட்டத்தில் முடிவுறுகிறது.[7] அதன் குன்றுப் பகுதிகள் மட்டும், தென் கிழக்கே ஜொகூர் மாநிலம் வரை செல்கின்றன.

இந்த மலைத்தொடரில் மிக உயர்ந்த இடத்தை குனோங் கொர்பு என்று அழைக்கிறார்கள். இந்த மலையின் உயரம் 2,183 மீட்டர் (7,162 அடி). வடக்கே தாய்லாந்து பகுதியில், மலேசிய எல்லைப் பகுதியில் உள்ள உலு தித்தி பாசா மலைதான் உயர்ந்த இடமாகும். இந்த மலையின் உயரம் 1,533 மீட்டர்.[8] தெற்கே படர்ந்து நீடிக்கும் குன்றுப் பகுதிகளில் குனோங் லேடாங் மலைதான் மிக உயரமானது. தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழில் லேடாங் மலை என்று அழைக்கிறார்கள். குனோங் லேடாங் மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றது.[9]

Remove ads

உள்கட்டமைப்பு

தித்திவாங்சா மலைத்தொடரில் மலேசியாவில் புகழ்பெற்ற பல சுற்றுலாத்தளங்கள் உள்ளன. பெலும் அரச வனப்பூங்கா, கேமரன் மலை, கெந்திங் மலை, பிரேசர் மலை போன்ற தளங்கள் இந்த மலைத்தொடரில் தான் இருக்கின்றன.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads