தின்குழியம்

From Wikipedia, the free encyclopedia

தின்குழியம்
Remove ads

தின்குழியம் (Phagocyte) என்பது தின்குழியமை என்னும் உயிரியல் செயல்முறை மூலம் திண்மக் கழிவுப் பொருட்களை, கேடு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை, அல்லது வேறு வெளிப் பதார்த்தங்களை தனது கலமென்சவ்வினால் மூடி உள்ளிழுக்கும் அல்லது விழுங்கும் உயிரணுக்களாகும். பொதுவாக குருதியில் காணப்படும் வெண்குருதியணுக்களில் சில இவ்வகையான தின்குழிய வகைகளாகும். நடுவமைநாடிகள், ஒற்றைக் குழியங்கள், பெருவிழுங்கிகள், கிளையி உயிரணுக்கள், மற்றும் Mast cell என்பன தின்குழியங்களாகும்.

Thumb
ஒரு அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கியினால் அவதானிக்கப்படும்போது தெரியும் ஒரு தனி நடுவமைநாடியும் (மஞ்சள்), அதனால் தின்குழியமை செயல்முறையால் விழுங்கப்படும் ஆந்த்ராக்ஸ் எனப்படும் பாக்டீரியாவும் (செம்மஞ்சள்)

தின்குழியங்கள் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் மிக முக்கிய பங்காற்றுவதனால், தொற்றுநோய்களுக்கு எதிரான உடலியல் தொழிற்பாட்டில் முக்கிய இடத்தை வகிக்கின்றன]].[1]. விலங்கு இராச்சியத்தில் அனைத்து உயிரினங்களிலும் இந்த தின்குழியங்களின் தொழிற்பாடு இருப்பினும்[2], முதுகெலும்பிகளிலேயே மிகவும் விருத்தியடைந்த நிலையில் காணப்படுகின்றது[3]. மனிதர்களில் ஒரு லீட்டர் குருதியில் கிட்டத்தட்ட 6 பில்லியன் தின்குழியங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது[4].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads