திருக்கடையூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்கடையூர் (திருக்கடவூர்) (ஆங்கிலம்:Thirukadaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். திருக்கடையூர் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பிறகு திருக்கடையூர் நகரம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது திருக்கடையூர் நகரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,533 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 2,757 ஆண்கள், 2,776 பெண்கள் ஆவார்கள். திருக்கடையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78.71% ஆகும்.
சிறப்பு
மயிலாடுதுறை - காரைக்கால் சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 21.4 கி.மி. தூரத்தில், காரைக்காலில் இருந்து 21.7 கி.மீ. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் சீர்காழி - காரைக்கால் சாலை வழியில் இவ்வூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சைவத்தலமாகும்.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads