திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tiruchirappalli Junction railway station, நிலையக் குறியீடு:TPJ) தென்னிந்தியாவின் முக்கியமான தொடருந்து சந்திப்புகளுள் ஒன்றான இது, தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது இந்திய இரயில்வே தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. மேலும் இந்த இரயில் நிலையம் ஆனது தென்னக இரயில்வே மண்டலத்தின் இரண்டாவது பெரிய இரயில் நிலையம் ஆகும்.
Remove ads
வரலாறு
1853-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியை தலையிடமாகக் கொண்டு, தென்னக இரயில்வே (The Great Southern of India) உருவாக்கப்பட்டது. [1] 1859-ஆம் ஆண்டில், தென்னகத்தின் முதல் இருப்புப் பாதையான திருச்சிராப்பள்ளி - நாகப்பட்டினம் அமைக்கப்பட்டது. தற்போது, தென்னிந்தியாவின் முக்கிய தொடர்வண்டி சந்திப்பாகவும், தென்னக இரயில்வேயின் தனிப் பெரும் மண்டலமாகவும் உருப்பெற்றுள்ளது.[2]
சிறப்பம்சங்கள்
- குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
- பொருட்களை சோதிக்கும் எந்திரம்
- கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
- உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
- குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை (முதல் வகுப்பு பயணியருக்கு)
- சரக்கு இரயில்களுக்கான தனி இருப்புப் பாதை
- எளிதில் சென்றடையக்கூடிய டாக்ஸி, ஆட்டோ நிறுத்தம்
- உடைமை பாதுகாப்பு அறை
- ஊனமுற்றோர், முதியோருக்கான இலவச மின்கல ஊர்தி (சாமான்களுக்கு அனுமதியில்லை)
- பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
Remove ads
வளர்ச்சியும் வளமையும்

- இந்தியாவின் சுறுசுறுப்பான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.
- இந்தியாவின் தலைசிறந்த தொடருந்து நிலையங்களில் முதன்மையான இடம் பரணிடப்பட்டது 2013-07-30 at the வந்தவழி இயந்திரம்
- தமிழகத்தில் சென்னை சென்ட்ரலுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய தொடருந்து சந்திப்பு நிலையம் ஆகும்.[சான்று தேவை]
- இதன் மண்டலத்தில் தினசரி 200 தொடருந்துகள் கடந்து செல்கின்றன.
- தொடருந்து சந்திப்பு நிலையத்தை உலகத் தரத்திற்கு மாற்றியமைக்கும் பணி மும்முரமாக நடந்துவருகின்றது.
- திருச்சி - கன்னியாகுமரி மின்மயமாக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
- சிறந்த மின்சார கையாளுமைக்கான 5 நட்சத்திரக் குறியீடு பெற்ற ஒரு சில தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.
அகல இருப்புப் பாதை
- விழுப்புரம் - விருத்தாச்சலம் - திருச்சிராப்பள்ளி
- திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் - கும்பகோணம் - மயிலாடுதுறை - கடலூர் துறைமுகம் - விழுப்புரம்
- விழுப்புரம் - பாண்டிச்சேரி
- விருத்தாசலம் - கடலூர் துறைமுகம்
- தஞ்சாவூர் - காரைக்கால் துறைமுகம் - காரைக்கால்
- திருச்சிராப்பள்ளி சந்திப்பு - திருச்சிராப்பள்ளி கோட்டை
- நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி
- நீடாமங்கலம் - மன்னார்குடி
- மயிலாடுதுறை - திருவாரூர்
- விழுப்புரம் - வேலூர் இராணுவ முகாம்
- காரைக்குடி - திருவாரூர் (பட்டுக்கோட்டை வழி)
குறுகிய இருப்புப் பாதை
- திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி (தற்போது பயன்பாட்டில் இல்லை)
திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்படும் தொடருந்துகள்
- திருச்சி - ஹவுரா (12664/12663) (ஹவுரா அதிவிரைவு வண்டி)
- திருச்சி - பகத்கீ கோத்தி ஹம்சபர் அதிவிரைவு வண்டி
- திருச்சி - சென்னை (16178/16177) (மலைக்கோட்டை விரைவு வண்டி)
- திருச்சி - சென்னை (16854/16853)(சோழன் விரைவு வண்டி)
- திருச்சி - திருவனந்தபுரம் (இன்டர்சிட்டி அதிவிரைவு வண்டி) (22627/22628)[3]
- திருச்சி - மயிலாடுதுறை விரைவு வண்டி (16234/16233)
- திருச்சி - ஸ்ரீகங்காநகர் ஹம்சஃபர் அதிவிரைவு வண்டி
திருச்சியிலிருந்து 23-இற்கும் மேற்பட்ட பயணியர் தொடருந்துகள் மானாமதுரை, தஞ்சாவூர், இலால்குடி, மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, நாகூர், விருத்தாசலம், திண்டுக்கல், கடலூர், இராமேஸ்வரம், சேலம், காரைக்குடி, விழுப்புரம், மன்னார்குடி மற்றும் பாலக்காட்டை இணைக்கின்றன.
ஹவுரா, திருப்பதி, ஶ்ரீகங்கா நகர், ஜோத்பூர், மதுரை, எர்ணாகுளம், திருநெல்வேலி, வேளாங்கண்ணி, பெங்களூரூ, புனே, செங்கல்பட்டு, ஹைதராபாத் ஆகிய ஊர்களுக்கு இங்கே இருந்து விரைவு மற்றும் அதிவிரைவு இரயில்வண்டிகள் புறப்படுகின்றன.
Remove ads
நகர்ப்புற நிலையங்கள்
- திருச்சிராப்பள்ளி நகரம் (TPTN)
- திருச்சிராப்பள்ளி கோட்டை (TP)
- திருச்சிராப்பள்ளி பாலக்கரை (TPE)
- ஸ்ரீரங்கம் (SRGM)
- பொன்மலை (GOC)
- மஞ்சதிடல் (MCJ)
- உத்தமர்கோவில் (UKV)
- பிச்சாண்டார்கோவில் (BXS)
திருச்சி மாவட்ட துணை நகர்ப்புற நிலையங்கள்
தஞ்சாவூர் மார்க்கம்
- திருவெறும்பூர் (TRB)
- தொண்டைமான்பட்டி
அரியலூர் மார்க்கம்
- வாளாடி
- மாந்துறை
- இலால்குடி (LLI)
- காட்டூர்
- புள்ளம்பாடி
- கல்லக்குடி/பழங்காநத்தம் (டால்மியாபுரம்)
- கல்லகம்
திண்டுக்கல் மார்க்கம்
கரூர் மார்க்கம்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads