திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)

இது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)map
Remove ads

திருப்பத்தூர் (ஆங்கிலம்:Tirupathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்

இது சிவகங்கையிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 62 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6,431 வீடுகளும், 25,980 மக்கள்தொகையும் கொண்டது.[3]

இது 8.40 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

Remove ads

வரலாறு

பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையையும் சோழ நாட்டின் தலைநகரான தஞ்சாவூரையும் இணைக்கும் சாலையில் முக்கிய வர்த்தக தடத்தில் திருப்பத்தூர் நகரம் சங்க காலம் முதல் அமைந்துள்ளது, பாரி மன்னன் மீது கபிலர் எழுதிய பாடல்கள் மூலம் அறிய வருகிறது. 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவார பாடலிலிருந்து, திருப்பத்தூர் அப்போதே நகரமாக இருந்ததும், அதில் சமண, ஆசிவக, பௌத்த மடங்கள் அமையப்பெற்றிருந்ததையும் அறிய முடிகிறது.

பாண்டிய எல்லை நகரமான இந்நகர், சோழ-பாண்டிய போர்களின் போது, சோழர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் மாறி மாறி இருந்து வந்திருக்கிறது. பாண்டியர்களின் மிகப்பழமையான கல்வெட்டு இவ்வூர் திருத்தளிநாதர் கோயிலிலிருந்து பெறப்பட்டிருக்கிறது.

13 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூர் படையெடுப்பின்போது, கடுமையான சேதத்தை திருப்பத்தூர் அடைந்துள்ளது.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்நகர், கிழக்கிந்தியக் கம்பெனியின் கைகளுக்கு மாறியது. 1801 புரட்சியின்போது, மருது பாண்டியர்கள் வெள்ளையர்களிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றினர். மருது சகோதரர்களிடமிருந்து மீண்டும் கோட்டையைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் 24 அக்டோபர் 1801 அன்று, மருது சகோரர்கள் உள்ளிட்ட 500 இற்கும் மேற்பட்ட புரட்சியாளர்களை திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிட்டனர். திருப்பத்தூர் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Remove ads

முக்கியமான இடங்கள்

Remove ads

இதனையும் காண்க

திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads