திருப்பூணித்துறை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருப்பூணித்துறை அல்லது திரிப்பூணித்துறா (ஆங்:Thripunithura, மலையாளம்: തൃപ്പൂണിത്തുറ) இந்திய மாநிலம் கேரளாவில் கொச்சி பெருநகர்ப் பகுதியில்[2] அமைந்துள்ள ஊராகும். இது இந்திய விடுதலைக்கு முன்னர் அமைந்திருந்த கொச்சி இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. அந்த மன்னர் பரம்பரையினர் இன்றும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மலை அரண்மனை கொச்சி மன்னரின் உறைவிடமாக இருந்தது. இங்குள்ள பூர்ணாத்திரேயசர் கோவிலில் உள்ள திருமால் சந்தானகோபாலன் வடிவில் எழுந்தருளியுள்ளதாகக் கருதப்படுவதால் குழந்தையில்லாதவர்கள் இங்கு வழிபட வருதல் வழக்கமாக உள்ளது.
திருப்பூணித்துறை நகரம் இந்திய நாடாளுமன்றத்தில் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[3]
Remove ads
பிரபல இசைக் கலைஞர்கள்
மிருதங்கக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணன், கடம் கலைஞர் திருப்பூணித்துறை இராதாகிருஷ்ணன் ஆகியோர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.
திருப்பூணித்துறை துடுப்பாட்ட மன்றம்
திருப்பூணித்துறை கேரள துடுப்பாட்ட நிகழ்வுகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.
- திருப்பூணித்துறை துடுப்பாட்ட மன்ற பெயர்பலகை
- மன்ற மனை
- மன்றம் பராமரிக்கும் அரண்மனை ஓவல் துடுப்பாட்ட விளையாட்டுத் திடல்
- விளையாட்டுத்திடலில்
- மன்ற பார்வையாளர் அரங்கம்
- வெற்றிப்புள்ளிகள் காட்சிப்பலகை
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

