திருவொற்றியூர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

திருவொற்றியூர்map
Remove ads

திருவொற்றியூர் (ஆங்கிலம்:Tiruvottiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதியும் ஆகும். தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற பழைமையான திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் இங்கமைந்துள்ளது.

விரைவான உண்மைகள்
Thumb
தியாகராச சுவாமி கோயில் இராசகோபுரம்
Thumb
திருவொற்றியூர் மெட்ரோ நிலையம்
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13.16°N 80.3°E / 13.16; 80.3 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள்தொகை 2,49,446 பேர் ஆவர். அதில் 1,25,300 ஆண்களும், 1,24,146 பெண்களும் உள்ளடங்குவர். இந்நகரத்தின் எழுத்தறிவு வீதம் 88.6% ஆகும்; பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் அமைகிறது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26,903 பேர் ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதமாக அமைகிறது. பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 35,332 மற்றும் 502 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.7%, இசுலாமியர்கள் 6.93% , கிறித்தவர்கள் 8.56% சமணர்கள் 0.15% பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[5]

Remove ads

போக்குவரத்து

பேருந்து

திருவொற்றியூரில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (மா.போ.க.) முனையம் உள்ளது. மா.போ.க. பேருந்துகள் திருவொற்றியூரில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இது தவிர மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சில, இங்கிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.

தொடர்வண்டி

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தொடர்வண்டித்தடம் திருவொற்றியூர் வழியாகச் செல்கிறது. திருவொற்றியூர் தொடருந்து நிலையம் மற்றும் விம்கோ தொடருந்து நிலையம் திருவொற்றியூரில் அமைந்துள்ளன. சென்னை மெட்ரோ தொடர்வண்டி சேவையும் உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விம்கோ நகர் செல்லும் மெட்ரோ தொடர்வண்டியில் திருவொற்றியூர் தேரடி இரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் கோவில் உள்ளது.

இவ்வூரின் சிறப்பு

கோயில்கள்

மேலும் விபரம்

திருவொற்றியூர், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ள இப்பகுதியின் அருகில் மணலி பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை, எண்ணூர் அனல்மின் நிலையம், கே.சி.பி. தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளும் மற்ற சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகளும் திருவொற்றியூரைச் சுற்றி அமைந்துள்ளன. இங்கு மனைகள் குறைவான விலையில் கிடைத்ததால், இங்கு மக்கள் தொகை பெருகத் தொடங்கியது. சென்னையின் கூவம் ஆறு திருவொற்றியூரின் மேற்குப் பகுதியில் பாய்கிறது.

Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads