தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்
அரசாங்கக்களுக்கு இடைப்பட்ட பிராந்திய நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (The Union of South American Nations (டச்சு: Unie van Zuid-Amerikaanse Naties, Portuguese: União de Nações Sul-Americanas, எசுப்பானியம்: Unión de Naciones Suramericanas ) என்பது தென் அமெரிக்காவில் உள்ள 12 நாட்டரசுகளின் ஒன்றிணைப்பு நிறுவனம் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பு. இது UNASUR என்றும் UNASUL என்றும் சுருக்கமாகக் குறிக்கப்படும். மெர்க்கோசூர், ஆண்டீயக் குழுமம் ஆகிய இரண்டு பகுதிகளின் தங்களுக்குள்ளான "கட்டற்ற" வணிக உறவுகளையும் இணைக்கும் முகமாக உருவாக்க பட்டது. இது தென் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கவல்ல ஒரு முயற்சி என்று கருதப்படுகின்றது. மே 23, 2008 அன்று பிரேசிலின் தலைநகராகிய பிரேசிலியாவில் இந்த ஒன்றியத்தின் அரசியல்சட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்டு உருப்பெற்றது.

Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads