தென் செபராங் பிறை மாவட்டம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தென் செபராங் பிறை மாவட்டம் (ஆங்கிலம்: South Seberang Perai District; மலாய்: Daerah Seberang Perai Selatan (SPS); சீனம்: 威南县; ஜாவி: دسبرڠ ڤراي اوتارا ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
242 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 2010-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 162,905.
Remove ads
பொது
தென் செபராங் பிறை மாவட்டத்திற்கு வடக்கே இருக்கும் மத்திய செபராங் பிறை மாவட்டத்தை, சுஞ்சோங் ஆறு (Sungai Junjong) பிரிக்கிறது. கிழக்கில் கெடாவின் மாநில எல்லை பிரிக்கிறது. தெற்கில் பினாங்கு தீவில் இருந்து, பினாங்கு நீரிணை பிரிக்கிறது. இதே தெற்குப் பகுதியில் பேராக் மாநிலத்தின் எல்லையும், தென் செபராங் பிறை மாவட்டத்தைப் பிரிக்கிறது.
இந்த மாவட்டத்தின் தலைநகரம் சுங்கை ஜாவி. மாவட்டத்தின் பெரிய நகரம் நிபோங் திபால். தென் செபராங் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற இடங்கள்:
பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
தென் செபராங் பிறை மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முக்கியமான தொழில். தவிர மற்றும் விவசாயத் துறையும் முக்கியமானது. இந்த மாவட்டத்தில் எண்ணெய் பனை தோட்டங்கள் மிகுதியாக உள்ளன.
மாவட்ட எல்லைகள்
- மத்திய செபராங் பிறை மாவட்டம் - (வடக்கில்)
- கெடா மாநிலம் - (கிழக்கில்)
- பேராக் மாநிலம் - (தெற்கில்)
- மலாக்கா நீரிணை - (மேற்கில்)
Remove ads
மக்கள் தொகையியல்
கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[2]
நாடாளுமன்றத் தொகுதிகள்
மலேசிய நாடாளுமன்றத்தில் மத்திய செபராங் பிறை மாவட்டத்தின் பிரதிநிதிகள் (டேவான் ராக்யாட்)
சட்டமன்றத் தொகுதிகள்
பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் வடக்கு செபராங் பிறை மாவட்டப் பிரதிநிதிகளின் பட்டியல்
Remove ads
தென் செபராங் பிறை மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா; பினாங்கு; தென் செபராங் பிறை மாவட்டத்தில் (South Seberang Perai District) 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1529 மாணவர்கள் பயில்கிறார்கள். 178 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]
Remove ads
பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
- ☆ வட செபராங் பிறை மாவட்டம் - (North Seberang Perai District)
- ☆ மத்திய செபராங் பிறை மாவட்டம் - (Central Seberang Perai District)
- ☆ தென் செபராங் பிறை மாவட்டம் - (South Seberang Perai District)
- ☆ வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் - (Northeast Penang Island District )
- ☆ தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் - (Southwest Penang Island District)
புள்ளி விவரங்கள்
- "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014.
- "2017 Q2 statistics" (PDF). Penang Institute. Archived from the original (PDF) on 2017-12-01.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

