தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்னாங்கூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2] பாண்டுரங்கன் கோயிலின் கருவறை விமானம் அதன் உச்சியில் கோபுரக் கலசத்தடன் வட இந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது.[3] ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகந்நாதர் கோயில் விமானம் போன்ற அமைப்பில் இக்கோயில் விமானம் தோற்றமளிக்கிறது.[4] இக்கோயிலின் மூலவர் பாண்டுரங்கன் மற்றும் தாயார் இரகுமாயி ஆவர். தலவிருட்சம் தமால மரம் ஆகும். கோயிலின் பின்புறம் பிருந்தாவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில், ஆள்கூறுகள்: ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 124 மீட்டர் உயரத்தில், 12.555235°N 79.614885°E / 12.555235; 79.614885 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் அமைந்துள்ளது.

சிவன், விஷ்ணு, பிரம்மா, மகாசோடஷி, இராசராசேசுவரி, மகாலட்சுமி, சரசுவதி, கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், மேதா தட்சிணாமூர்த்தி, பாலா, அன்னபூரணி, சண்டிமகாலட்சுமி, சாமுண்டா, ருத்ரன், அச்வாரூடா, இராசமாதாங்கி, வராகி, பிராஹ்மி, பிரத்தியங்கிரா தேவி, கவுமாரி, சரபேசுவரர், யோக நரசிம்மர், அகோரமூர்த்தி, வைஷ்ணவி, வனதுர்க்கை, பராசரசுவதி, மகேசுவரி, மாகேந்திரி, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[5] கோகுலாஷ்டமி மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads