பிரத்தியங்கிரா தேவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரத்தியங்கிரா (சமசுகிருதம்: प्रत्यङ्गिरा; Prātyangira, பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி: Pratyangira) பார்வதியின் வடிவமாக உள்ள ஒரு கடவுளாக இந்து சமயப் பெண் கடவுளாக ஆவார். பிரத்யங்கரா தேவி பார்வதியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலில் படி, பிரத்தியங்கரா பார்வதியின் வடிவம் ஆவார். இந்த பிரத்யங்கரவுக்கு நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் பதினெட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.

Remove ads
பெயரிலக்கணம்
காலகண்டி, பைரவ மஹிஷி என பிரத்தியங்கரா தேவி, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.[1]
வடிவம்
சிம்ம முகமும், 18 கரமும், கரிய நிற தோலுடன் திரிசூலம், பாசம், உடுக்கை ஆகிய பல ஆயுதங்களை ஏந்திவாறு இருக்கிறாள் இவள்.
தொன்மக் கதை
இந்து தொன்மவியலின் படி விஷ்ணு நரசிம்மராக பிரகலாதனுக்காக இரணியனை (இரணியகசிபுவை) கொல்ல சிங்க உருவமெடுத்து, அவரை கொன்று விட்ட பிறகும் அடங்காத கோபத்துடனே இருந்தார். பிரகலாதன் நரசிம்மரின் கோபத்தைத் தணிப்பதுடன் கதை முடிகிறது. மேலும் அவர் விஷ்ணுவாக தனது உண்மையான வடிவத்தை ஏற்று பிறகு வைகுண்டத்திற்குத் திரும்புகிறார்.[2] சைவ மரபின்படி நரசிம்மரின் அடங்காத கோபத்தால் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துன்பப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் சிவனை அடைந்து தங்களை காக்கும் படி வேண்டினர். சிவனும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, நரசிம்மரை அமைதிப்படுத்த, சூலினி தேவி மற்றும் பிரத்யங்கிரா தேவி வடிவில் சக்தியின் இரண்டு இறக்கைகள் கொண்ட சரபர் என்றும் (கழுகும், கடவுளும், சிங்கமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்ததாக பல புராணங்கள் கூறுகின்றன) உருவினை எடுத்து வந்த அவருடன் சண்டையிட்டார். அப்போது நரசிம்மர் கண்டபேருண்டர் என்ற இரு தலைகளை கொண்ட கழுகைத் தோற்றுவித்தார். இந்த இருதலைப் புல்லும் சரபரும் போரிட்டனர். இந்த சண்டையானது உலகையே அச்சுறுத்தியது. எனவே சரபர் தன்னுடைய நெற்றி கண்ணிலிருந்து அவரின் துணையான பார்வதியை பிரத்தியங்கிரா தேவி என்ற உருவத்தில் அனுப்பினார். பிரத்யங்கிரா நரசிம்மரை சமாதானப்படுத்தி, அவர் தனது சாத்வீக வடிவத்தை மீண்டும் அடையவைத்தார். இதனால் உலகில் தருமம் மீட்டெடுக்கப்பட்டது.[3] அந்த சிவனின் சரபர் வடிவத்தின் இறக்கைகளின் பக்கம் காணப்படுபவளே இந்த பார்வதியின் உருவமான பிரத்தியங்கிரா தேவி. இந்த நிகழ்வை குஞ்சிதாங்க்ரி ஸ்தவம் என்ற நூலில் உமாபதி சிவாசாரியர் குறிப்பிட்டுள்ளார்.[4]
வழிபாட்டு முறை
மிளகாய் யாகம்
பொதுவாக பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் ஒவ்வொரு அமாவாசையன்றும் நடத்தப்படுகிறது.[5] இந்த யாகத்தினை பிரத்தியங்கிரா யாகம் என்றும், நிகும்பலா யாகம் என்றும் அழைக்கின்றார்கள்.[6]
ஆலயங்கள்
- மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயில் - மானாமதுரை.
- அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில், கும்பகோணம்.
- பிரத்யங்கிரா தேவி கோயில், தூத்துக்குடி (ஒரே கல்லிலான சிலை).
- மகா பிரத்யங்கிரா தேவி கோயில் - திருவள்ளூர் (நான்கு சிங்கங்கள் இழுக்கும் ஒரு ரதத்தில் ஆறு அடி உயரத்தில் உள்ள ஒரு பிரத்யங்கிரா தேவி சிலை).
- பிரத்யங்கிரா தேவி கோயில், சோலிங்கநல்லூர், சென்னை.
- ஜெய் பிரத்யங்கிரா பீடம், மலையடிவாரம், 40, வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோயில் அருகில், செங்கல்பட்டு மாவட்டம்.
- சுயம்பு ஆகாச பிரத்தியங்கரா தேவி கோயில் - திருவெண்காடு (சீர்காழி வட்டம்).
- மகா பிரத்யங்கிரா கோயில் (PDD) - வரிசைபத்து, சீர்காழி.
- மகா பிரத்யங்கிரா தேவி கோயில் - இரண்டாம் சிப்காட், ஒசூர்.
- மகா பிரத்யங்கிரா தேவி கோயில், பள்ளூர், வேலூர் மாவட்டம், 631051.
- ஸ்ரீ மகா பிரத்யங்கரா தேவி கோயில், நடுநாலுமூலைக்கிணறு, 628213, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.
- ஶ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோயில், ஊழிக்கோடு, கோணம், விரிகோடு அஞ்சல், மார்த்ததாண்டம், கன்யாகுமரி மாவட்டம்.
- மகா பிரத்யங்கிரா தேவி கோயில், சீலையம்பட்டி, தேனி.
- முத்து விநாயகர் கோயிலில் தனி கோயில் வைத்திருக்கும் பிரத்யங்கிரா தேவி கோயில், பட்டாச்சாரி தெரு, அயனாவரம், சென்னை - 600023.
Remove ads
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads