தெலுங்கானா மாநில விருந்தினர் மாளிகை

இந்தியாவின் தெலங்கானா மாநில கட்டடம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தெலுங்கானா மாநில விருந்தினர் மாளிகை (Telangana State Guesthouse) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசாங்கத்தின் விருந்தினர் மாளிகையாகும். முன்னர் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. முகாம் அலுவலக அலுவலகம் காவல்துறை தலைவர் (பாதுகாப்பு) அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இப்போது தெலுங்கானா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரச்சா பவனின் ஒரு பகுதியாகும். கிரீன்லாந்து வட்டம், பேகம்பேட்டையில் இம்மாளிகை அமைந்துள்ளது.[1]

விரைவான உண்மைகள் மாநில விருந்தினர் மாளிகை (தெலுங்கானா) State Guesthouse (Telangana), பொதுவான தகவல்கள் ...
Remove ads

வரலாறு

முன்னர் தெலுங்கானா மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும், பிரிக்கப்படுவதற்கு முன்பு ஆந்திரப் பிரதேச (ஐக்கிய) முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் இருந்தது. ஆந்திரப் பிரதேச முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக காங்கிரசு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 2004ஆம் ஆண்டு இந்த முகாம் அலுவலகம் கட்டப்பட்டது. 2005ஆம் ஆண்டு இங்கு குடிபெயர்ந்த முதல் முதலமைச்சர் ஒய்.எசு. ராசசேகர ரெட்டி ஆவார். 2009ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ஐந்து ஆண்டுகள் இம்மாளிகையில் தங்கியிருந்தார்.[2]

Remove ads

முகாம் அலுவலகம்

இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த வளாகத்தில் முதல்வர் முகாம் அலுவலகமும் குடியிருப்பும் அமைந்துள்ளன. இந்த நிலத்தின் பரப்பளவு 2 ஏக்கர் (8,100 மீ2) பரப்பளவுக்கு அதிகமாகவும், கட்டடம் 25,500 சதுர அடி பரப்பளவிலும் அமைந்துள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் சாலைகள் உள்ளன. இது வாசுத்து சாத்திர கொள்கைகளின்படி கட்டப்பட்டது.

2007 ஆம் ஆண்டு இந்த வளாகத்தில் ₹1.15 கோடி செலவில், 2,500 சதுர அடி (230 மீ2) செலவில் ஓர் அரங்கம் கட்டப்பட்டது. இந்த அரங்கம் அதிநவீன பதிவு மற்றும் இணையதள தொகுப்பு உபகரணங்களைக் கொண்டுள்ளது.

Remove ads

மாளிகையில் வசித்த முதலமைச்சர்கள்

மாநிலம் பிளவுபடுத்தலுக்குப் பிறகு

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, முகாம் அலுவலகம் தெலுங்கானா முதலமைச்சரின் இல்லமாக மாறியது, ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் லேக்வியூ விருந்தினர் மாளிகையில் வசிக்கிறா.[3]

  • கே சந்திரசேகர் ராவ் - 22 சூன் 2014 - 2015[4]

தற்போது இது தெலுங்கானா முதலமைச்சரால் விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads