நடு அந்தமான் தீவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடு அந்தமான் தீவு (Middle Andaman Island) இந்தியாவின் அந்தமான் தீவுகளின் நடுப் பகுதியில் உள்ள தீவு ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1,536 கி.மீ.². இங்கு வங்காளிகள், தமிழர், மலையாளி குடியேறிகள் உட்பட ஜாரவா பழங்குடி மக்களும் பெருமளவு வாழ்கின்றனர். வேளாண்மை, மற்றும் தோட்டப் பயிர்ச்செய்கை ஆகியன இத்தீவு மக்களின் முக்கிய தொழிலாகும்.
நடு அந்தமான் தீவு வடக்கு அந்தமான் தீவை ஆஸ்டென் நீரிணை பிரிக்கின்றது. தெற்கே பரட்டாங்கு தீவை ஹாம்பிரேய்சின் நீரிணை பிரிக்கின்றது. இவ்விரண்டு நீரிணைகளும் குறுகிய, ஆழம் குறைந்த கால்வாய்கள் ஆகும். மேற்கே இன்டர்வியூ தீவை இன்டர்வியூ கால்வாய் பிரிக்கின்றது.[1]
இத்தீவின் கரையோரப் பகுதி 2004 ஆழிப்பேரலையின் போது சேதத்திற்குள்லானது, ஆனாலும் அந்தமான் தீவுகளின் ஏனைய தீவுகளுடன் ஒப்பிடும் போது சேதங்கள் இங்கு குறைவே.
நடு அந்தமானின் முக்கிய நகரங்கள் ரங்காட், பில்லிகிரவுன்ட், கடம்தாலா, பக்குல்டாட்டா, பேதாப்பூர் ஆகியனவாகும். வடக்கு நகர் மாயாபந்தர் நடு அந்தமானில் இருந்தாலும், வடக்கு அந்தமான் தீவினால் நிருவகிக்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads