நரம்பியல்

நரம்புத் தொகுதியிலுள்ள கோளாறுகள் பற்றிய மருத்துவச் சிறப்புத்துறை From Wikipedia, the free encyclopedia

நரம்பியல்
Remove ads

நரம்பியல் (Neurology) என்பது நரம்புத் தொகுதி, நரம்பு மண்டலங்கள், நரம்புச் சம்பந்தமான கோளாறுகள் குறித்துப் படிக்கும் படிப்பு ஆகும். கிரேக்கச் சொல்லான நியூரான் (neuron) என்பதன் பொருள் நரம்பணு என்பதாகும். லோஜியா (logia) என்பதன் பொருள் படிப்பு என்பதாகும். நரம்பிலானது மூளை, முள்ளந்தண்டு வடம் மற்றும் புற நரம்பு மண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கிய நரம்புத் தொகுதியில் ஏற்படும் அனைத்து வகையான நோய்கள், நோயறிதல் மற்றும் சிகிச்சைகளைக் குறித்த மருத்துவப் பிரிவாகும்.[1]

விரைவான உண்மைகள் அமைப்பு, குறிப்பிடத்தக்க நோய்கள் ...

நரம்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை 'நரம்பியல் நிபுணர்கள்' (Neurologists) என்றழைக்கிறோம். இவர்கள், நரம்பியல் கோளாறுகளை ஆராய்வதற்கும், கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் பயிற்சிப் பெற்றவர்கள்.[2] நரம்பியல் நிபுணர்கள் பக்கவாதம், கால்-கை வலிப்பு, நடுக்குவாதம், மூளையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், தண்டுவட மரப்பு நோய், தூக்கக் கோளாறுகள், மூளையில் ஏற்படும் காயங்கள், ஒற்றைத் தலைவலி, மூளைக் கட்டி, ஆல்சைமர் நோய் போன்ற மறதி நோய்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதில் திறமைப் பெற்றவர்கள்.[3] நரம்பியல் நிபுணர்கள் மருத்துவ ஆராய்ச்சி, மருந்தியக்கச் சோதனைகள், அடிப்படை அல்லது சிகிச்சைநிலை ஆராய்ச்சி ஆகியவற்றிலும் பங்கு வகிக்கலாம்.[2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads