நானு ஓயா

இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

நானு ஓயா
Remove ads

நானு ஓயா (Nanu Oya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் நுவரெலியா நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.[1] இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இந்நகரின் அருகே மகாவலி கங்கையின் முக்கிய கிளை ஆறான நானு ஒயா பாய்கிறது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகத்தை நுவரெலியா வட்டார அவை கவனிக்கின்றது. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலை துறை சார்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மரக்கறி வளர்ப்பும் கால்நடை வளர்ப்பும் இரண்டாம் நிலை முக்கிய தொழில்களாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1682 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நானு ஓயா Nanu Oya, நாடு ...

நானு ஓயா தொடருந்து நிலையம் இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கிரேட் வெசுடன், அம்பேவளை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது.[2] பொடிமெனிக்கே, உடரடமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads