நாய் சேகர்

2022-இல் வெளியான தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நாய் சேகர்
Remove ads

நாய் சேகர் ( Naai Sekar ) என்பது 2021ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான அறிவியல் புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.[1] ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். இப்படத்தில் சதீஸ், பவித்ரா லட்சுமி (அறிமுகம்)[2][3], ஜார்ஜ் மரியன், சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, சிறீமன் உள்ளிட்ட துணை நடிகர்களுடன் நடித்துள்ளனர். ஒரு லாப்ரடர் ரெட்ரீவர் நாயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.[4] படம் நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையைச் சுற்றி வருகிறது. ஒலிப்பதிவில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த ஒரு பாடலுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றன.[5] இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[6][7]

விரைவான உண்மைகள் நாய் சேகர், இயக்கம் ...
Remove ads

தலைப்பு சர்ச்சை

லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்கும் படத் தலைப்பை 'நாய் சேகர்' என்று திட்டமிட்டனர். 2006இல் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[8] ஆனால் தலைப்பு ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் படத்திற்கு 'நாய் சேகர்' என்றே தலைப்பிட்டு வெளியிட்டது.[9] எனவே வடிவேலுவின் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தலைப்பை நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என மாற்றம் செய்தனர்.[10][11]

Remove ads

வெளியீடு

படத்தின் முன்னோட்டம் 1 சனவரி 2022 அன்று வெளியானது.[12] படத்தை தைப்பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சனவரி 13, 2022 அன்று வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.[13] [14]

திரையரங்குகளுக்குப் பிந்தைய தொலைக்காட்சி செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை முறையே சன் தொலைக்காட்சி மற்றும் நெற்ஃபிளிக்சு வாங்கியுள்ளது.

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads