பட்டர்வொர்த் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பட்டர்வொர்த் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Butterworth Railway Station மலாய்: Stesen Keretapi Butterworth); சீனம்: 北海火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டம், பட்டர்வொர்த் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பட்டர்வொர்த் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரில் இந்த நிலையம் உள்ளது.
Remove ads
பொது
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், தாசேக் குளுகோர் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.
இதற்கு முன்பு தாய்லாந்து, பாங்காக், பன்னாட்டு விரைவு தொடருந்து (International Express) சேவையின் தெற்கு முனையமாகச் செயல்பட்டது. இந்தச் சேவை இப்போது பாடாங் பெசார் நிலையத்தில் முடிவடைகிறது.[1]
சுல்தான் அப்துல் அமீத் படகுத் துறை
பினாங்கு சென்ட்ரல் மற்றும் சுல்தான் அப்துல் அலீம் படகுத்துறை ஆகிய மையங்களுக்கு அருகில் இந்த நிலையம் அமைந்துள்ளது. அத்துடன் பினாங்கு தீவுக்குச் செல்வதற்கான படகுகளுக்கும்; பேருந்துகளுக்கும் அங்கு பாதசாரிகள் நடைபாதைகளும் உள்ளன.[2]
இந்த நிலையம் மலேசியக் கூட்டரசு சாலை 1 வழியாக பட்டர்வொர்த் நகரத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் செபராங் பிறை, பட்டர்வொர்த், செபராங் ஜெயா, பிறை மற்றும் பினாங்கு தீவுக்கு சேவை செய்யும் ஒரு முக்கியமான நிலையமாகவும் கருதப்படுகிறது.[3]
ரேபிட் பினாங்கு
பட்டர்வொர்த் நகரத்தில் இருந்து பினாங்கு தீவுக்குச் செல்லவும்; பினாங்கு தீவில் இருந்து பட்டர்வொர்த் வருவதற்கும்; ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை பெரி படகு சேவைகள் உள்ளன. 2021-ஆண்டு முதல் பாதசாரிகளுக்கு மட்டுமே இந்தச் சேவை வழங்கப்படுகிறது.[4]
பட்டர்வொர்த் தொடருந்து நிலையத்திற்கு அருகில் பினாங்கு சென்ட்ரல் பேருந்து முனையம் உள்ளது. அங்கு இருந்து ரேபிட் பினாங்கு மூலமாக பினாங்கு தீவிற்குச் செல்லலாம்.[5]
Remove ads
தொடருந்து சேவைகள்
மலாயா தொடருந்து நிறுவனத்தின் கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் வழங்கும் தொடருந்து சேவைகள்:
- கேடிஎம் கொமுட்டர் வடக்குப் பிரிவு: பட்டர்வொர்த் – பாடாங் பெசார்
- ETS Train No. EP9372/EP9371 "Premium": பட்டர்வொர்த்– கிம்மாஸ் >>> கோலாலம்பூர் நடுவண்; ஈப்போ
- ETS Train No. EP9176/EP9171 "Premium": பட்டர்வொர்த்– கோலாலம்பூர் நடுவண்
முன்னாள் சேவைகள்
- SRT Train 36 International Express: பட்டர்வொர்த்-பாங்காக்
- KTM Intercity Train 01/02 Ekspres Rakyat: பட்டர்வொர்த்–கோலாலம்பூர் நடுவண்–Singapore
- KTM Intercity Train 10/11 Ekspres Sinaran Utara: பட்டர்வொர்த்–கோலாலம்பூர் நடுவண்
- KTM Intercity Train 22 Senandung Mutiara: பட்டர்வொர்த்–கோலாலம்பூர் நடுவண்
- KTM Intercity Train 23 Senandung Mutiara: பட்டர்வொர்த்–சிங்கப்பூர்
காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads