பண்டைய கொரிந்து

பண்டைய கிரேக்க நகர அரசு From Wikipedia, the free encyclopedia

பண்டைய கொரிந்து
Remove ads

கொரிந்து ( Corinth, (/ˈkɒrɪnθ/ KORR-inth; பண்டைக் கிரேக்கம்: Ϙόρινθος) என்பது கொரிந்தின் பூசந்தியில் இருந்த ஒரு நகர அரசு ஆகும். இது பெலொப்பொனேசியாவுடன் கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் குறுகிய நிலப்பரப்பாகும், இது ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையில் நடுப்பகுதியிலேயே இருந்தது. நவீன கொரிந்து நகரம் பண்டைய இடிபாடுகளின் வடகிழக்கே சுமார் 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) தொலைவில் அமைந்துள்ளது. 1896 ஆம் ஆண்டு முதல், ஏதென்ஸில் உள்ள அமெரிக்கன் ஸ்கூல் ஆஃப் கிளாசிக்கல் ஸ்டடீஸ் மூலம் கொரிந்து அகழ்வாய்வுகளால் பண்டைய நகரத்தின் பெரும்பகுதியை கண்டறிந்துள்ளனர். மேலும் கிரேக்க பண்பாட்டு அமைச்சகம் அண்மையில் நடத்திய அகழ்வாய்வுகள் பழங்காலத்தின் முக்கியமான புதிய அம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.

விரைவான உண்மைகள் CorinthΚόρινθοςϘόρινθος, தலைநகரம் ...

கிறிஸ்தவர்களுக்கு புதிய ஏற்பாட்டில், உள்ள புனித பவுலின் இரண்டு கடிதங்களான முதல் மற்றும் இரண்டாவது கொரிந்தியர்களில் இருந்து கொரிந்து நன்கு அறியப்பட்டதாகும். திருத்தூதர் பவுலின் சமயப்பரப்பு பயணங்களின் ஒரு பகுதியாக, திருத்தூதர்களின் செயல்களிலும் கொரிந்து குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, பௌசானியாஸின் இரண்டாவது புத்தகம் Description of Greece கொரிந்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பண்டைய கொரிந்து கி.மு. 400 இல் 90,000 மக்கள்தொகை கொண்ட கிரேக்கத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகும். [1] உரோமானியர்கள் கிமு 146 இல் கொரிந்துவை இடித்து, கிமு 44 இல் அதன் இடத்தில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கினர், பின்னர் அதை கிரேக்கத்தின் மாகாண தலைநகராக மாற்றினர்.

Remove ads

வரலாறு

ஆர்கோசுக்கு வடேக்கே உள்ள கொரிந்தியா ஓமர் காலத்திலேயே செல்வ செழிப்பு மிக்கதாக இருந்தது. கடல் தொடர்பு காரணமாக வெளிநாடுகளுடன் கடல்வழி தொடர்பு கொள்வது இதற்கு மிக எளிதாக இருந்தது. இதனால் இதன் பொருளாதாரம் எப்போதும் மேலோங்கி இருந்தது. ஏதென்சுக்கும் கொரிந்துக்கும் இடையில் வணிக போட்டி நிலவியதால் அடிக்கடி பிணக்கு இருந்துவந்தது. கொரிந்தியர்கள் கடலோடிகளாகவும் இருந்தனர்.[2]

கொரிந்தியாவில் சிறிது காலம் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்தது. இதை ஆண்ட சர்வாதிகாரிகளில் குறிப்பிடத்தகவர் பெரியாண்டர் என்பவராவார். இவரது ஆட்சி சுமார் நாற்பது ஆண்டுகள் நடைபெற்றது. இவரின் ஆட்சியில் கொரிந்தில் கலைகள் பெருகின. இவர் வரிகளைக் குறைத்து தொழில்களுக்கு ஊக்கம் அளித்தார்.[2]

கொரிந்தியாவில் அடிமை முறை பலமாக இருந்தது. கி.மு. 480 ஆம் ஆண்டில் இங்கு உரிமையுள்ள ஐம்பதினாயிரம் குடிமக்களும், அறுபதாயிரம் அடிமைகளும் இருந்தனர் என்று ஒரு கணக்கீடு கூறுகிறது.[2]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads